பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 71 திருநீற்றுப் பதிகங்களும், நமச்சிவாயப் பதிகங்களும் 'மந்திரம்' என்று மதிக்கத் தக்கவை. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (28) என்ற குறளில் இதனை நிறைமொழி எனக் குறிப் பிடுவர் வள்ளுவப் பெருந்தகை. நிறை மொழி' என்பது, அருளிக் கூறினும் வெகுண்டுக் கூறினும் அவ்வப் பொருள்களைப் பயந்தே விடும் மொழி' என்பர் பரிமேலழகர். எனவே மறை மொழி என்ப தற்கு நிறைமொழி மாந்தரது ஆணையின் ஆற்றல் அனைத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ள மொழி எனவும் பொருள் கொள்ளுதல் பொருந்தும். இதையே ஆசிரியர் தொல் காம்பியர் பிறிதோரிடத்தில் "வாய்மொழி' என்ற பெயரால் குறிப்பிடுவர். திருவாய்மொழி, திருமொழி என்ற பெயர்கள் இப் பெயர் வழக்கத்தை அடியொற்றி வந்தவையாகும். எனவே, சபித்தற் பொருட்டாய மந்திரச் செய்யுளை "அங்கதப் பாட்டு, எனவும், வசைப் பொருட்டாகாது உலக நலங்குறித்து வரும் மறை மொழியினையே "மந்திரம்’ என வழங்குதல் தொல்காப்பியரின் கருத் தென்பது ஈண்டு அறியத் தக்கது. திருமூலரின் திருமந்திரத்தைச் சிறந்த மந்திர இலக்கியமாகக், கொள்ளலாம். - (கி) குறிப்பு மொழி : எழுத்தின் இயல்பினாலும் சொல்லின் தொடர்ச்சியாலும் புலப்படாது, சொல்லி னால் உணரப்படும் பொருட்டுப் புறத்தே பொரு ளுடையதாய் நிற்பது குறிப்பு மொழி ஆகும்; இதுவே 'கூற்றிடை வைத்த குறிப்பு’ என்பது. 12. "பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே’ (செய்யு - நூற். 75)