பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போன்ற அறிஞர்களின் சேவையைப் பாராட்டுகிறார்.தமிழ் இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றின புதிய முயற்சியில் பிறந்ததுதான் புதுக்கவிதை' என்று எழுதுகிறார். இதனை வரவேற்றுப் பேசும் நூலாசிரியர் இது தமிழ் அன்னைக்குச் சூட்டப்பெற்ற புதியதொரு அணியாகும் என்றும் சொல்லுகிறார்.

  இப்படி இலக்கியங்களுடைய பல்வேறு வகைகளையும் ஆராய்ந்து இக்கால இலக்கிய வளர்ச்சி பற்றியும், ஆழ்ந்த புலமையோடு எளிய முறையில், சிந்தனைப் பொறிகள் தெறிக்கப் பேராசியர் ரெட்டியா அவர்கள் மிகச் சிறப்பாக இந்த நூலை வடித்திருக்கிறார். நல்ல நூல்களை எழுதுவதும் வெளியிடுவதுமாகக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் ரெட்டியார். அவர்களுடைய நூற்றுக் கணக்கான படைப்புகளுக்கு இடையில் இந்நூல் சிறப்பான இடத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை. தமிழுக்கும். தமிழகத்திற்கும் நூலாசிரியர் ஆற்றிவரும் தொண்டு மிகவும் போற்றுதற்குரியது.
                                   
                                       -இரா. காந்தி. 

“ஈரோடு இல்லம்’

      47, மூன்றாவது முதன்மை சாலை 
      காந்திநகர், அடையாறு 
      சென்னை-60 0020
      ஆகஸ்டு 6, 1997 
      தொ.பே. 4910974