பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 77 குரவை (சிலப். 17) என்பனவற்றில் வரும் பாடல்கள் யாவும் வரிப்பாடல்களே. இத்துடன் இது நிற்க. நான்கு வகைப் பார்க்களாகிய வெண்பா, ஆசிரி யப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவற்றுள் முன்னைய இரண்டும் வாழ்ந்தன; பின்னைய இரண்டும் எப்படியோ வீழ்ந்தன, செல்வாக்கு இழந்தன என்று மேலே குறிப்பிட்டேன். வெண்பா, ஆசிரியப்பா ஆகிய இரண்டிலும் வெண்பா இசை இன்பம் மிக்கது. இப்பாக்கள் பலவகை உணர்ச்சிளுக்கு ஏற்பப் பலவாறு ஒசை வேற்றுமைகளைக் காட்டுவதற்கு இடம்தர வில்லை. ஒவ்வோர் உணர்ச்சியிலுள்ள பல்வேறு வகைகளையும் இவற்றைக் கொண்டு காட்டுதல் இயலாது. இப்பாக்களை மட்டிலும் கொண்டு தனிக் கவிதைகளையும் காவியங்கனையும் பாடியவர்கள் உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு பாட்டின் ஒசைகளை வேறு படுத்திக் காட்டுவதில் பெரிதும் வெற்றிபெறவில்லை. அப்பாட்டின் யாப்பு முறைகளும் அவற்றிற்குப் போது மானவையாக இல்லை. கி.பி. ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் பக்திப் பாடல்கள் பாடிய ஆழ்வார் நாயன்மார்களும் தம் முடைய பக்திப் பாடல்களில் இளங்கோ அடிகளைப் பின்பற்றி நாட்டுப் பாடல்கள்ன் கூறுகளை அமைத்துப் பயன்படுத்தினார்கள். அவற்றிலிருந்து அமைந்ததே விருத்தம் என்னும் செய்யுள் வடிவம். விருத்தம் ஒலி நயத்தைப் புலப்படுத்துவதில் தனிச் சிறப்புடன் விளங்குவதால், இது பெருஞ்செல் வாக்குப் பெற்று வளர்ந்தது. நாயன்மார்களும் ஆழ் வார்களும் பெரும்பாலும் இவ்விருத்த வகைப்பாக்களை மேற்கொண்டு பக்தி இயக்கத்தை வளர்த்தனர். ‘விருத்தம்' என்ற சொல் வடசொல்லாக இருந்த