பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 8 : முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக்கொடுத்த வரமும் ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும் தின்று மார்பில் புக்கோடி உயிர்பருகிப் புறம்போயிற்(று) இராகவன்றன் புனித லிற்றி? என வெற்றியின் பெருந் திறத்தைப் பெருமிதம் நிறைந்த விருத்த வகையால் உணர்த்துவதை அறியலாம். அன்றியும், காவிய மாந்தர்களின் இயல்புகளுக்கேற்ப வும், செய்யுள் வகைகளை வேறுபடுத்தி அமைக் கின்றான். இங்ாவனம் கவிஞர்கள் தம் உணர்ச்சிகட்கும் தம்முடைய கற்பனை மாந்தர்களின் உணர்ச்சிகட்கும் ஏற்றவாறு பல்வகை விருத்தங்களைப் பயன்படுத்த முடிந்தது. சிந்தாமணி, இராமகாதை, பெரிய புராணம் போன்ற காவியங்களைப் படிப்பவர்கள் இதனை நன்கு உணர்வார்கள். இங்ங்னமே இராமலிங்க அடிகள், தாயுமான அடிகள் அருளியுள்ள எண்ணற்ற பாடல்களில் எளிய சொற்கள் அமைந்திருப்பினும் அவை யாப்புக்குக் கட்டுப்பட்டு உணர்ச்சி பொங்கி வழிவதற்கேற்றவாறு அமைந்து திகழ்கின்றன. பாரதி யாரும் பாவேந்தரும் அவர்தம் கவிதைகளில் இந்த விருத்த யாப்பினை அற்புதமாகக் கையாண்டு இருப் பதை அவர்களின் கவிதையில்கண்டு அநுபவிக்கலாம். இலக்கியப் பிரிவுகள் : தமிழ் இலக்கியச் செல்வங் களைப் பேரிலக்கியங்கள்’ என்றும் சிற்றிலக்கியங்கள் என்றும் வகைப்படுத்திக் கூறலாம். அடிகளால் അഞ്ഞഅജ്ഞ 9. இராவணன் வதை-198 இ-6