பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

“சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய
தீவு பலவினும் சென்றேறி, அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.”

“விண்ணை இடிக்கும் தலைஇமயம் எனும்
வெற்பை அடிக்கும் திறனுடையார்; சமர்
பண்ணிக் கலிங்கத்திருள் கெடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.”

இவ்வாறு ஒரு நாட்டு மக்களின் பண்பாட்டுயர்விற்கு அரசியல் உரிமையே அடிப்படையாம் என்ற உணர்வால், அவ்வுரிமை உணர்ச்சியினை ஊட்டவல்ல இலக்கியங்களை ஒருசிலர் வளர்த்து வந்தனர். நிற்க. ஒருநாட்டு மக்க ளிடையே முதலாளி, தொழிலாளி, செல்வர். வறியர் என்பன போலும் பொருள் நிலையால் உண்டாம் வேறுபாடு நிலை பெறின், அந்நாடு, அரசியல் உரிமை பெற்றும் பயன் இன்றாம்: அவ்வேறுபாடு உடைமையால் தொழில் வளர்ச் சித் தடையுறும். தொழில் வளராத நாட்டில் செல்வம் செழிக்காது; செல்வம் அற்றநாடு, அது பெற்ற நாட்டிற் குப் பல்லாற்றானும் அடிமைப்பட்டே கிடக்கும். ஆகவே, நாட்டின் நல்வாழ்வில் நாட்டம் உடையவர், முதலாளி தொழிலாளர்களிடையே நல்லுறவு நிலை பெறுதற்காம் வழி வகைகளை வகுத்தல் வேண்டும், தமிழ் நாட்டுத் தலைவர்கள் இவ்வுண்மை உணர்ந்த உரவோராதலின், தமிழகத்தில் உரிமைக் கிளர்ச்சி ஒருபால் நடைபெற்றிருக்கும்போதே, தொழிலாளர் உயர்விற்காம் கிளர்ச்சியும் தொடர்ந்து நடை பெறலாயிற்று. அதனால், தொழிலாளர்த் தொண்டின்