பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மக்கள் உள்ளத்தை உணர்த்தி, உலகநிலையினை உயர்த்தும் உறுதிகொண்ட இலக்கியங்கள் ஒரு பால் தோன்றிக் கொண்டிருக்க, வேறு சிலர், வேறு வேறு வகையான இலக்கியங்களைத் தோற்றுவிப்பாராயினர். தமிழ் மக்கள், உலக மக்கள் அனைவரோடும் உறவு கொள்ளத் தொடங்கினர். அதனல், உலகில் தலே சிறந்த மொழிகளில் விளங்கும் உயர்ந்த இலக்கியங்களே அறியும் வாய்ப்பு அவர்க்கு உண்டாயிற்று. பிறமொழிகளே அறிந்து, அவற்றின் சிறந்த இலக்கியங்களேக் கற்றுச் சுவைத்த அறிஞர்கள், அவ்வின்பத்தை எனத் தமிழரும் அறிந்து மகிழவேணடும் என விரும்பினர். அதல்ை, அம்மொழிகளின் சிறந்த பேரிலக்கியங்கள் சிலவற்றை, அவற்றின் சுவைகெடா வகையில் தமிழில் ஆக்கினர். பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் ஆக்கிய மாரி வாயிலும், பண்டிதமணி கதிரேசன் செட்டியார் ஆக்கிய சுக்கிர நீதியும் அவ்வாறு வந்த வடமொழித் தழுவல் இலக்கியங்களாம்.

இவ்வாறு பிறமொழியில் சிறந்து விளங்கிய பேரிலக்கியங்களைத் தமிழ்ப்படுத்தும் பணி ஒருபால் நிகழ, ஆங்கிலப் புலவர்கள் ஆக்கிய, அரியபொருள் நயம் பொருந்திய அழகிய சிறு சிறு செய்யுட்களேத் தமிழாக்கும் இலக்கிய்ப் பணியினைப் புலவர் சிலர் போற்றி மேற்கொண்டனர்.

ஆழ்கடலின்கீழ் எவர்க்கும் அறிய முடியாமல் அளவிறந்த ஒளிமணிகள் அமிழ்ந்துறையும் அம்மா! பாழ்கிலத்தில் வீன கப்பகல்இரவும் பூத்துப் பலகோடிப் பணிமலர்கள் பரிமளிக்கும் அம்மா!'