பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0

சமணரும் பெளத்தரும் நாடகத்தை வெறுத்து ஒதுக்கி வந்தமையாலும், சைவரும் வைஷ்ணவரும், தங்கள் தங்கள் சமய இலக்கியங்களே வளர்ப்பதிலேயே கருத்து .டையராய் இருந்து விட்டமையாலும் சங்க காலத்திற்குப் பிறகு நாடக இலக்கியம் தோன்ருதாயிற்று. பதினேழு, பதினெட்டாம் நூற்ருண்டுகளில் தோன்றிய மீனுட்சியம்மை குறம், குற்றலக் குறவஞ்சி, முக்கூடற் பள்ளு போலும் குறவஞ்சிகளும், பள்ளுகளும் ஒரு வகையில் சிறந்த இலக்கி பங்களாகக் கருதப்படினும், அவை, தொடர்ந்த நிகழ்ச்சி களைக் கூறும் உண்மையான நாடக இலக்கியங்களாகா.

ஆங்கிலத் தொடர்புற்று, ஆங்கில நாடகப் பேராசிரிய சாகிய ஷேக்ஸ்பியரின் நாடகங்களைக் கற்கத் தொடங்கிய - தன் பயனப், சிறந்த நாடக இலக்கியங்கள் மீண்டும் தோன்றத் தொடங்கின. நாடகம் என்ற பெயரால், பலர், பல நூல்களே எழுதியுள்ளனரேனும், அவையெல்லாம் இலக்கிய நயம் குறியாது, நாடகப் பயன் ஒன்றே கருதி எழுந்தன ஆதலின், இலக்கியங்களாக மதிக்கப் பெரு வாயின. சோழன் செங்களுன்மீது களவழி நாற்பது பாடிச் சேரமான் கணக்கால் இரும்பொறையைச் சிறைவீடு செய்த பொய்கையார் செயலே நாடகப் பொருளாகக் கொண்டு, திருவாளர், வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் ஆக்கிய மாணவிஜயமும், வரலாற்றுப் பின்னணி கொண்டு, பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் ஆக்கிய மைேன்மணியமும் நாடக உ றுப்புக்களோடு, இலக் கியச் சுவையும் தோன்ற விளங்கும் சிறந்த நாடக இலக்

கியங்களாம். - - -