பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21



செய்யுட்கள், தமிழ் அப்பொருட்டாதல் அறிக. ' தேமதுரத் தமிழ் என ஒருவர் அதைப் பாராட்டியுள்ளார். தமிழ் மொழி, இவ்வளவு இனிமை வாய்ந்திருப்பதற்குக் காரணம் யாது ? அம்மொழி அறிந்த பெரியார்கள், அவ்வப்போது ஒன்று கூடி, மொழியை இனிமை நிறைந்ததாக ஆக்குவது எவ்வாறு என்பதை ஆராய்ந்து ஆராய்ந்து, அதை அவ்வாறு ஆக்கியுள்ளனர். " கூடலின் ஆய்ந்த நண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ என்ற திருக்கோவையார் தொடர், இக்கருத்தையே வலியுறுத்துகிறது. இவ்வாராய்ச்சி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வந்துளது. ஆன்றவிந்தடங்கிய அச் சான்ருேர்களின் உள்ளங்களில் தோய்ந்து தோப்ந்து, தமிழ் மொழி, இனிமை நிறைந்த மொழியாகிப் பெருமையுற்றுளது.

தமிழ் மொழி, அவ்வாறு பெற்ற அவ்வினிமைப் பண்பை, இன்று பெறவில்லை; சங்க காலத்திற்கும் முந் பட்ட காலத்திலேயே, அது அங்கிலையை அடைந்து விட் டது. கடைச்சங்ககாலமே, இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்ப. அதற்கு முன்னே, ஒவ்வொரு சங்கத்திற்கும் இடையே எத்தனையோ ஆண்டுகள் கழிந்து விட்டன. அவ்வாறு நோக்கியவிடத்துத் தமிழ் மொழி, இன்று பெற்றுள்ளதன் இனிய பண்பை எத் த்னேயோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெற்று விட்டது என்பது உறுதியாம். - . .

மக்கள், தங்கள் உள்ளத்தே எழுந்த எண்ணங்களைத் தாங்கள் எண்ணியவாறே, ஏனையோரும் உணருமாறு