பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 f

திற்கே அவ்வாரும் அவ்வுள்ளம், ஐம்புலங்களுக்கும் ஒருங்கே இன்பம் தரும் மகளிர்பால் நெகிழ்ந்து விடுவதில் வியப்பேதும் இல்லை. மேலும், அவ்விளைஞன் மனைவியோ, ஈடிலாப் பேரழகும் பேரன்பும் உடையவள் பின்புறத்தே தாழ்ந்து ஆடும் பின்னலும், கருங்குவளே மலர் போலும் மையுண்ட் கண்களும் அவள் அழகினே மேலும் அதிகப் படுத்தியுள்ளன. அத்தகையாளப் பிரிந்து செல்கிருன் இளைஞன். பிரிந்து வந்து விட்டானேனும், அவளே மறந்து விடுதல் அவனுல் இயலாது போயிற்று. பிரியுங்கால் அவன் கண்ட அவள் பேரழகுத் தோற்றம், அவனேப் பிரிந்து வாழ மாட்டாது அவள் கொண்ட பெருந்துயர் கிலே ஆகிய அவ்விரண்டும், அவன் உள்ளத்தை விடாது பின்தொடர்ந்தன. அவனே இளைஞன் காலமோ, மனேவி யோடிருந்து இன்புற்று வாழ வேண்டிய காலம் அவளோ பேரழகும் உடையாள் : மணமும் அண்மையிலேயே நடந்துள்ளது. இங்கிலேயில், அவன் உள்ளம், அவள் அழகிற்கு அடிமையாகி விட்டது.

அடிமைப்பட்ட அவ்வுள்ளம், வழியே சென்று கொண்டிருந்த இளைஞனே, மேலே செல்லாவாறு தடுத்து விட்டது: அன்பும்; அழகும் உடைய அவளேப் பிரிந்து வருவதே தவறு. அன்பாலும், அழகாலும், இளமைச் சிறப்பாலும் இன்பம் தருவாளே, அவள் பிரிவினைப் பொறுக்காது பெருந்துயர் கொண்டு வருந்த விட்டுப் பிரிந்து வருதல் பெருந் தவறு, ஆகவே உன் இன்பம் கருதி இல்லேயாயினும், அவள் துன்பம் துடைத்தல் கருதியாயினும், மேலே செல்லாது மீண்டு ஊர் செல்வாயாக என எடுத்துக் கூறியது, இளேஞன்