பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியங்கள் இவ்வாறு வேறுபடுதற்காம் காரணத்தை, அவ்விலக்கியங்கள் தோன்றிய காலத்தில் வாழ்ந்த மக்கட் பண்பாட்டினை ஒட்டியே அறிதல் இயலும். அம்முறையில் தமிழ் நாட்டில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக உண்டான அரசியல் மாறுபாடுகளையும், அவ்வரசியல் மாறுபாட்டிற்கேற்ப, மக்கள் மனநிலையில் உண்டான மாறுபாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு தோன்றிய இலக்கிய வகைகளை வரிசையாக வகுத்துரைப்பது இந்நூல்.

தமிழிலக்கியம் ஒவ்வொன்றைப்பற்றியும், அவ்விலக்கியத்தை ஆக்கித் தந்த ஆசிரியர் ஒவ்வொருவரைப்பற்றியும் அவர் தகுதி, தகுதியின்மைகளை ஆராய்ந்து கூறும் நூல்கள், தமிழில் பல உள. இவ்வாறு மக்கள் இயல்பிற்கேற்ப, இலக்கியம் வளரும் வகையினை வகுத்துரைக்கும் இம்முறை, ஒரு புது முயற்சி. இம்முறையில் ஒரு நூல் வெளியாதல் வேண்டும் என விரும்பி, அதை ஆக்கித் தரும் பணியினை என்பால் ஒப்படைத்த மலர் நிலையத்தார்க்கு என் நன்றி.


கா. கோவிந்தன்.