பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இலக்கிய வளர்ச்சி


1. தோற்றுவாய்

ஒரு மொழியில் எத்தனையோ நூல்கள் எழுதப் பெறுகின்றன. அவ்வாறு எழுதப் பெறும் நூல்கள் எல்லாம் இலக்கியங்கள் எனப் படா. நூல்கள், உடல் நூல், உயிர் நூல், உள நூல், நில நூல், வான நூல், மர நூல், விலங்கு நூல், பறவை நூல், சமூக நூல், சமய நூல், பொருள் நூல் என எண்ணற்ற வகைப்படும். கூறிய தலைப்புக்கள் ஒவ்வொன்றின் கீழும் எத்தனையோ நூல்கள் எழுதப்பெற்றுள்ளன. அங் நூல்களின் பரப்பும் பான்மையும், அவை அப்பொருள்களை ஆராய்ந்துணர்த்தும் வகையும் வனப்பும், அந்நூல்கள்