பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தையும் ஓர் ஒழுங்குபடுத்தி, மக்களிடையே வழங்கி, அவரை நல்லோராக்கும் நற்பணியினை மேற்கொண்டு வந்தனர். அத்தகையாருள் வள்ளுவரும் ஒருவர்; அதன் விளைவாய்த் தோன்றிய அறம் உரைக்கும் இலக்கியங்களுள் தலையாவது திருக்குறள்.

மக்கள் மனப் பண்பை வளர்க்கத் தோன்றிய சமயங்கள், தாம் கூறப்புகுந்த கொள்கைகளைக் குறையேதும் இன்றிக் கூறும் அப்பணியோடு நில்லாது, பிற சமயங்களைப் பழித்தும், அழித்தும் வாழத் தொடங்கின. தம்மை வாழ்விக்க வந்த சமயங்கள், இவ்வாறு தம்முள்ளே போராடிக் கெடுவதைக் கண்ட மக்கள், அவற்றின் உண்மைகளை உணரமாட்டாதும், அவற்றாலாம் பயனைப் பெறமாட்டாதும் வருந்துவாராயினர். அவ்வாறு வருந்தும் அம்மக்களுக்கு, அவர் கலக்கத்தைக் கலைந்து, அவர் விரும்பும் அவ்வுயர்ந்த பண்பாட்டினைப் பெறுதற்காம் வழி வகைகளை வகுத்துத்துக்கூறத் திருக்குறள் தோன்றிற்று.

திருக்குறள், சைவ வைஷ்ணவ சமயங்கள் கூறும் கடவுளுண்மையினை உட்கொண்டுள்ளது; ஆனால், அவை கூறும் சிவனையும், திருமாலையும் ஏற்றுக்கொள்ளாது, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஓர் இறை வழிபாட்டினை வற்புறுத்துகிறது. “தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக் கவலை மாற்றல் அரிது” என்ற குறள் வழியே கடவுள் வழிபாட்டினை வற்புறுத்தி, வழிபாட்டு நெறி நின்றோர்க்கே எடுத்தவினை இனிது முடியும்; அவரும் இன்புற்று வாழ்வர் என்று கூறிய திருக்குறள், “குடி செய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்