பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

தலைவராகக் கொண்டு எழுதப் பெற்றுளது; பெளத்த சார்புடைய இலக்கியமாகிய மணிமேகலையோ எனின், அச்சமய நெறி நின்று, துறவு மேற்கொண்ட ஒர் இளம் பெண்ணின் வரலாற்றையே தன் காவியப் பொருளாகக் கொண்டுளது; பழந் தமிழர், மணந்து மனையிருந்து மக்களோடு மகிழ்ந்து வாழும் வாழ்க்கையையே மாண்புடையதாக்கொண்டு வாழ்ந்தனர்; இளமைத் துறவு அவர்க்கு இன்பம் தந்திலது; அந்நெறியை இயற்கையொடுமுரண்பட்ட தாகவும் அவர்கள் மதித்தனர். அக்கால மக்கள் இயல்பு அத்தன்மைத்தாகவே, கணவனும் மனேவியுமாய்க் கலந்து வாழும் கண்ணகி வரலாறு உரைக்கும் சிலப்பதிகாரம் சுவைத்தது போல், இளமையிலேயே துறவு நெறி மேற்கொண்ட மணிமேகலை வரலாறு உரைக்கும் மணிமேகலை சுவைக்காதாயிற்று.

மேலும், தான் எழுத மேற்கொண்ட இலக்கியப் பொருளை விரிவாக எடுத்தோதி, தன் சமயக் கருத்துக்களைச் சுருங்கிய வாய்ப்பாட்டில், இடையிடையே கூறிச் செல்லும் சிலப்பதிகாரம் போலாது, மணிமேகலை. முழுக்க முழுக்கத் தன் சமயக் கொள்கைகளேயே எடுத்துக் கூறி, காவியச்சுவை கெடாமை கருதி, அதற்குத் துணையாகத் தமிழகத்தின் இயற்கை இன்பம், செல்வச் சிற்ப்புக்களை இடையிடையே சுருங்கிய வாய்பாட்டான் கூறிச் செல்லுகிறது. மணிமேகலை, சமயக் கொள்கை, அச்சமயக்கடவுள் வழிபாட்டு நிலை ஆகிய இவற்றையே விரித்துக் கூறிச்செல்வதால், அது இலக்கியச் சுவையினைப் பெரும் அளவில் மேற்கொண்டு, சமயக் கொள்கைகளை அள