பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

தொடங்கிய அவர்களுள், சைவர்கள், தம் இலக்கியப் பொருளாகத் தமிழ் நாட்டு நிகழ்ச்சிகளேயே கொள்ளக் கருதி, சமயத் தொடர்பற்ருர் வரலாற்றினைக் கொள்ளாது, சிவத் தொண்டு பூண்டு சிவனடி சேர்ந்தார் வரலாறுகளேயே கொண்டனர்; அவ்வாறு வந்ததே பெரிய புராணம். அடியார் பெருமைகூறும் அவ்விலக்கியம், தான்் காட்டும் இயற்கைக் காட்சிகளிலும், தன் சமயச்சுடர் விளங்கக் காட்டிச் செல்கிறது.

பரந்தவி3ள வயல்செய்ய பங்கயமரம் பொங்கெரியில் வரப்பில்வளர் தேமாவின் கனிகிழித்த மதுநறுநெய் கிரந்தரம் நீள் இலக்கடையால் ஒழுகுதலால், கெடிதவ்வூர்

மரங்களும் ஆகுதிவேட்கும் தகைய என

மணந்துளதால் '

பெரியபுராணம் போலும் இலக்கியங்கள் பக்திச் சுவை கனி சொட்டச் சொட்டப் பாடப் பெற்றனவேனும், வியப்பும் புதுமையும் விளங்கும் வடநாட்டு வரலாறு களே அடிப்படையாகக் கொண்டு எழுந்த சமண இலக்கி யங்கள்பால் சென்ற தமிழர் உள்ளத்தைத் தம்பால் சர்த்தல், அவ்விலக்கியங்களாலும் இயலவில்லை. அஃத றிந்த சைவரும், வைஷ்ணவரும் தமிழ்நாட்டு அடியார் களின் பெருமை பாராட்டுவது விடுத்து, சிவைேடும், திருமாலோடும் தொடர்பு படுத்தி வடநாட்டில் வழங்கப் பெற்றுத் தமிழ்நாட்டு மக்களால், மிகப் பழைய காலம் தொட்டே அறியப்பட்டு வந்த வரலாறுகளே அடிப்படையாக் கொண்டு இலக்கியங்களை இயற்றத் தொடங்கினர். அவ்வாறு வந்தனவே கம்பராமாயணமும், வில்லி பாரதமும்,