பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

பேரரசு, ஒருகால், கடாரம் வென்ற வீறு தோன்று உயர்ந்தும், ஒருகால் ஈழம் சென்று மறைந்துவாழ்ந்து மானம் குன்றித் தாழ்ந்தும், இவ்வாறே வாழ்வையும், தாழ்வையும் மாறி மாறிப் பெற்று, பதினான்காம் நூற் நூண்டின் தொடக்கத்தே தன் மண்ணிலிருந்து மறைந்துவிட்டது; மகமதியர் ஆட்சிக்கு அடிபணிந்துவிட்டது தமிழகம். அதனால், இயற்கைக் காட்சிகளையும், இயற்கையோடியைந்த வாழ்க்கை வகைகளையும், வேந்தர்களின் வெற்றிப் புகழ்களையும் சமயச் சிறப்புக்களையும் தாங்கித் தழைத்து வந்த தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சியும், தடையுற்றது.