பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம் காட்ட முடிவதுபோல், பிரிச்செட்டின் சிறு கதைக்கோ, ஜாக்ஸின் கதைக்கோ ஈடாக ஒரு புதுமைப் பித்தன் கதையை எடுத்துக் காட்டுவதுபோல, ஷேக்ஸ்பியரின் ஒகி தல்லோவுக்கோ இப்பனின் நிழல்களுக்கோ ஈடாக, ஒரு தமிழ் நாடகத்தை நாம் சுட்டிக்காட்ட இயலாது என்பதே இதன் அர்த்த ம்.

எனினும் தமிழ் இலக்கியத்தில் நாடகப் பண்பு நிறைந்த நால்களும், நாடக முயற்சிகளும் உண்டு. காலம், களம் என்ற பண்புகளுக்குட்பட்டு, கதைப்போக்கில் பாத் திர வாயிலாக வரும் நாடகக் குரல், பல நூல்களிலும் கேட்கின்றது.

தமிழ் இலக்கியத்தில் எல்லாப் பண்புகளுக்கும் மகா தவி கம்பனுக்குத்தான் முதலிடம் தரமுடியும். கம்ப அடைய மகா காவியத்தில் பல உணர்ச்சிகள் மோது கின்றன, கலக்கின்றன. தருமம், கடமை, நேர்மை, வீரம், காதல் முதலிய பல உண்ர்ச்சிகளின் வடிவாக, ராமாயண பாத்திரங்கள் அமைந்திருக்கின்றன. இந்த இதிகாசத்தி லுள்ள நாடகப் பண்புக்குக் கம்பனுடைய கம்பீர கதியோ, பாத்திரங்களின் குணவார்ப்போ காரணமாய் இருக்க லாம். உணர்ச்சியின் உச்சங்களில் வார்த்தைகள் அவ னுக்குத் தொண்டு செய்கின்றன. சொல்லி வைத்தது போல் வல்லின மெல்லின ஓசைகள் வலுக்கொடுக்கின்றன . வார்த்தைகள் நொண்டியடிப்பதில்லை. ஒவ்வொரு உணர்ச் சிக் கட்டத்தையும் சரியான நாடகத் திறமையோடு பதன LOாய்க் கையாளுகிறான். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு ஆரம்பம், ஒரு படிவு இருக்கும்படிச் செய்துவிடுகிறான், இப்படி எத்தனையோ காட்சிகள் ஒவ்வொன்றும் அதனதன் அளவில் பூரணமானது.