பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறும் மேதை மட்டும் படைத்தவனல்ல. தா;டகக் கொட்டகையில் நாற்காலி எடுத்துப் போடும் வேலை லிருந்து, அரிதாரம் பூசுவது, நடிப்பது, நாடகத் தொழிலில் பங்குதாரராக இருப்பதுவரை பழகியவன். அதனால்தான் அவனுக்கு நாடக உத்திகளும் வெற்றியும் அவ்வளவு சீக்கிரத்தில் சுலபமாகக் கைவந்தன. ஷேக்ஸ்பியர் நாடகங் கனில் நாம் இலக்கிய ரசனையைமட்டும் காணவில்லை." மேடையில் அவை எந்த அளவு சோபிக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். காரணம், ஷேக்ஸ்பியர் தனது நாடகப்போக்கை, 'கட்புடா' வார்த்தைகள் தேக்கி விடக் கூடாது என்று கருதியிருக்கிறான். நாடகத்துக்கே பிரதானம் கொடுத்திருந்தபோதிலும், அவனுடைய பேத்து" விலாசத்தால் தெறித்துவரும் வார்த்தைகள், கருத்துக்கள் இலக்கியத்துக்காகவே அமைக்கப்பட்டனவோ என்ற மயக்கத்தை ஊட்டுகின்றன.

ஷேக்ஸ்பியருக்குப் பின்னால் எத்தனையோ ஆசிரியர்கள் தோன்றி, பலவித நாடகங்களை எழுதிச் சென்றிருக் கிறார்கள். ஆனால், சென்ற நூற்றாண்டிலும், இந்த நூற்றாண்டிலும் வெளிவந்த நாடகங்களைப் பார்த்தால் ஆஸ்கார் ஒயில்டு, நார்வீஜிய நாடகாசிரி யன் இப்ஸன், இன்று வாழும் ஜார்ஜ் பெர்னாட்ஷா மூவரையும் மறந்து விட முடியாது. இந்த இருபதாம் நூற்றாண்டு நாடக வளர்ச்சிக்கு ஷாவைத்தான் உதாரணம் காட்ட முடியும். ஷர எப்படி உருவானார் என்பதை அறிய, மற்ற இருவரைப் பற்றியும் அறிந்துகொள்ளவேண்டும். ஆஸ்கார் ஒயில்டு காலத்திலேதான் நாடகத்தில் நாடகப் பன்ரைமட்டும் பிரதானமாகக் கொள்ளாது, சமத்கார மான அறிவுத் தன்மையும் மிகுதியாக வலியுறுத்தும் முறை ஏற்பட்

10:7