பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

தமிழில் இலக்கிய விமர்சனம் உண்டா என்பதே ஒரு அர்த்தமுள்ள கேள்விதான். 'இருக்கிறது' என்று சொன் னால், அது இந்தக் காலத்தில்தான் முளைவிடுகிறது என்று சொல்ல வேண்டும். நமது பழைய நூல் ஆராய்ச்சிகளையும், விரிவுரைகளை யும், பாஷ்யங்களையும் நாம் இலக்கிய விமர்சனம் என ஒப்புக் கொள்ள முடியுமா என்டூல், அது யோசனைக்குரிய விஷய மாய் விடுகிறது. காரணம், அவை இலக்கியங்களை, துறை திணை முதலிய பொருள் இலக்கண ரீதியில் ஒத்துப் பார்ப்ப தோடு நின்றுவிட்டன. அதற்கு மேலாக, இலக்கிய கர்த்தாவின் இதயானுபவத்தை எடைபோட்டு நிறுக்க வில்லை. ஒரு கவிஞன் எப்படி உருவானான், அவன் கவி தைக்கு மூலமந்திரம் எது என்பதை யெல்லாம் ஆராய்த் திருப்பதாகத் தெரியவில்லை. கவிஞர்கள் என்றால், ஏதோ வரப்பிரசாதிகள், அவதார புருஷர்கள் என்றுதான் தெரித்து கொள்ள முடிகிறதே ஒழிய, அந்த 'மனிதனிடம்' பிறந்த அபூர்வ சக்தியைத் துழாவி அறிய முடியவில்லை. முலைப்பாலுண்ட சிறுவன் தோடுடைய சிவனைப் பாடியதும், காளியம்மை காறியுமிழ்ந்த தம்பலச் சாற்றை உண்டு, காளமேகமாய்க் கவிமழை பொழிந்ததும், ஈசனே வந்து அடியெடுத்துக் கொடுத்ததுமாக, பற்பல கட்டுக் கதைகளைத்தான் கேட்கிறோம். தமிழுக்குப் பெருமை 9