பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகம்

ஸ்பெஷெல் நாடகம்' மறைந்து, நாடகம் ஒரு நிரந்தரமான தொழிலாக வளர உதவி செய்தவர்கள் தமிழ்நாட்டிலுள்ள ஓரிரு பாய்ஸ் கம்பெனியார் தான். எனினும் அவர்கள் நாடகங்களில் நடிகர்களைவிட, திரைகளும் ஒளி விளக்கு களின் வர்ண ஜாலங்களும் தான் நன்றாக “ ' நடிக்கின்றன. மேலும், பழங் கஞ்சியாய்ப்போன இலக்கியச் சுவையற்ற பழைய நாடகங்களை, அதிகப் பணச் செலவில் கரட்டுகிருர் களே ஒழிய, முன்னேற்றம் என்பது இலக்கியப் பாதையில் செல்லவில்லை. இலக்கியப் பாலத்தான் மக்களுக்கு ஆணித்தரமான பதிலும், அறிவும் தர முடியும்.

அறிவுணர்ச்சி ஊட்டும் மற்றெல்லாக் கலைகளையும் விட, நாடகம் மக்களுக்கு லகுவில் பயன்படக் கூடியது. காரணம் நாடகம் என்பது வாழ்வின் பிரதிபிம்பம்; இமிட்டேஷன். எல்லாக் கலைகளுமே வாழ்க்கையின் பிரதிபிம்பம்தான் என்று சொல்வதுண்டு. ஒரு குரங்கின் கையில் கண்ணாடியைக் கொடுத்தால், அது எப்படித் தன் முகத்தைக் கண்ணடி யில் கண்டு $1ளனம் செய்யவோ, வலித்துக் காட்டவோ செய்கிறதோ, அதுபோலவே மக்கள் முன் அவர்கள் வாழ்க்க யையே பிரதிபலிப்பதில் அவர்களுக்கு ஆனந்தம் உண்டாகிறது. இரண்டு பெண் 1.ாட்டிக்காரன் வாழ்க்கையில் இழுபறி பட்டாலும், நாடக மேடையில் வரும் இரண்டு பெண்டாட்டிக்காரன் இழுபறி வாழ்வைக் கண்டு ஆனந்தம் கொள்கிறான். மக்கள் முன் பிரத்தியட்சமாக வாழ்வின் ஒரு பகுதியை ' ஜோடித்துக் காட்டுவதே நாடகம் என்று சொல்ல முடியும். நாடகம் இப்படி Xாழ்க்கை ைBAI. நேரடியாகப், பிரதிபலிப்பதாயிருப்பதால், நாடகாசிரியர்கள். மக்களுக் குப் புகட்டவேண்டிய நீதிகளை, பாத்திரங்கள் வாயிலாக,

t11