பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

திராணி வேண்டும்; இந்த முயற்சியில் ஆசிரியன் பிரக்ஞை இழந்துவிடாமல் இருப்பதற்கு நெஞ்சில் வலிமையும் வேண்டும். அப்போதுதான் கதாபாத்திரங்கள் உயிரோடு உலாவுவார்கள்.

தாடகாசிரியன் எந்தவித வாழ்க்கையையும் பிரதி பலிக்கலாம்; அதில் கலையின் ஜீவன் பிரிந்துவிடக் கூடாது. சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் இவைதான் தமக்குத் தேவை: புராணக் கதைகள் வேண்டாமென்று சொல் (லவில்லை. அறிவியலுக்குத் தக்கவாறு அவை இதமைந்தால் தான் இன்றையச் சமூகத்தில் அவை செல்லு

தமிழ் நாட்டில் சினிமாக் கலை அபரிமிதமாகப் பெருகி வதுதான் நாடகக் கலைக்கு மவுசு இறங்கியதற்குக் காரணம். எனினும் நாம் நாடகத்தை மறந்துவிடக் கூடாது. டெலி விஷனும், டெக்னிக் கலர் படங்களும் தமிழில் உண்டாகாத வரை, தமிழில் நாடகத்தைப் புறக்கணிக்க முடியாது. மேலும் சினிமா, வாழ்வின் பிரதிபிம்பத்தின் பிரதிபிம்பம்தான். அதைவிட, சதையும் எலும்பும் பெற்று நேரடியாக "உலவும் பாத்திரங்களைக் காணுவதில் மகிழ்ச்சி அதிகந்தானே,