பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம் சிந்தனைகளை வெளியிட அந்த வடிவங்களை, குறியீடு கனரகப் பயன் படுத்திக் கொண்டான். எனினும் காலம் செல்லச் செல்ல, தான் நினைத்துப் புலப்படுத்திய சிந்தனைகள் தன்னோடு அழிந்து போகாமலும், மறந்து போகர லும், இருப்பதற்காக, அந்த ஒலி வடிவங்களுக்கு ஒ வ டிவமும் கொடுத்து அவற்றை ஏட்டிலும், ஓட்டிலும் தழைவிலும் மலையிலும் பொறிக்க ஆரம்பித்தான்.

சிவடி வத் திலுள்ள பாஷை மனித சிந்தனையை நிரந்தர 80க்கவும், தூரத்து மனிதருக்கு செய்தி அனுப்பவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு சாதனமாகவே எழுந்தது. ஆகவே, பாஷை என்பது வாய்மொழி வாசகத்தையும், அதன் வரி வடிவமான எழுத்துக்களையுமே குறிக்கும். ஒரு பாஷை வெறும் வரிவடிவமாக. ஏட்டில் மட்டும் கிடக்குமானால், அது பாஷையல்ல. கணித சாஸ்திரக் குறியீடுகளைப் போல் அந்த பாஷையும் வெறும் வரிவடிவக் குறியீடு கனாகவே இருக்க முடியும். பாஷை என்பது மக்களால் பேசப்படவேண்டும், எழுத்தறிவற்ற பாமர மக்களி விருந்து, ஞானபண்டிதரான மேதாவிகள்வரை ஒருவர் கருத்தை இன்னொருவர் புரிந்து கொள்வதற்காக, பேசப்படும் ஒலிவடிவமே பாஷையாக விளங்க முடியும். பாஷைக்கு ஜீவாதாரமானது ஒலிவடிவமே அன்றி வரிவடிவம் அல்ல. வரிவடிவம் என்பது ஒலிவடிவின் ஸ்தூல வடிவமாய்த் தானிருக்க முடியும். ஆகவே ஒலி வடிவமற்று வரிவடிவ மான எழுத்துக்கள் மட்டுமே மிஞ்சி நிற்கும் பாஷை உயிர்வாழ முடியாது; அது மக்கள் வழக்கினின்று அழிந்து, செத்த பாஷையாய், . ஏட்டிலே மட்டும் கிடக்கும் குறியீடாய்ப் போய்விடும். ஒரு பாஷை மக்கள் வாயில் அடிபடும் வரையில்தான் அது செளகரியமாய் வாழ முடியும்.

118