பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசனம்

அப்படி வாய் மொழி வாசகத்துக்கு, அந்த பாலை யின் அமைப்பு, இலக்கணம் முதலியவை தடையாக இருந் தால், அந்த மொழி தானாகவே செத்து விடுகிறது. அப்படி வழக்கொழிந்துபோன மொழிகள் எத்தனையோ இருக் கின்றன. வடமொ: @ான சம்ஸ்கிருதம் இன்று ஏட்டோடு கிடந்து விட்டதற்கு இதுவே காரணம்.

-

ஆகவே ஒரு மொழியின் ஜீவிதத்தைக் காப்பதற்கு, நாம் எவ்வளவோ விஷயங்களைக் கவனித்தாக வேண்டும். முக்கியமாக, ஒரு மொழி, மொழி என்ற காரணத்துக்காக மட்டும் இல்லாமல், மக்களுக்கு இன்றியமையாத பரிவர்த் தளை சாதனமாகவும், கால் தேச வர்த்தமானத்துக்கும் சமுதாய வளர்ச்சிக் ஆழ் தக்கவாறு தன்னைச் சுகா. இந்துக் கொள்ளக் கூட்டி, கதாயும் இருக்கவேண்டும். சுருங்கச் சொன்னால், ஒரு மொழி எந்தவித மாறுதலுக்கும் இடங் கொடாது விறைப்பாக இராமல், மனித சௌகசியத்துக் கேற்ப நெளித்து வளைந்து கொடுப்பதற்கும் எதுவாயிருக்க வேண்டும், அப்போதுதான் அந்த மொழி மக்களை விட்டும் பிரியாமல், வழக்கினின்று கழன்று விழுந்து போகாமல் ஜீவிக்க முடியும்."

தமிழ் இப்படிப்பட்ட தன்மைகள் படைத்த பாஷை. அதனால்தான் உலகத்து ஆதி மொழிகள் ஐந்தில் தமிழ் மட்டுமே உயிரோடு உலாவுகிறது. இந்தத் தமிழ் தனது வசன ரூபத்தில் எப்படி வளர்ந்து வந்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

தொல்காப்பியச் சூத்திரத்தில் வசனத்தை எங்கெங்கு பிரயோகிக்கலாம் என்பதற்கு நான்கு விதிகள் குறிக்கப் பட்டிருக்கின்றன. ஒரு பாட்டின் இடையிலேயோ, பாட்டை

119