பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கிய விமாசனம் பொறுத்ததுதானே ஒழிய. 'விலையைப் பொறுத்த தில்லை. 'மதிப்பு' என்ற வார்த்தைக்குப் பொருள் தெரிந்து கொள்ள வேண்டுமானால், பொருளாதார அறிவு வேண் டும். லோகாயத முறையில், அதன் மூலமாகத்தான் 'மதிப்பை அறிய முடியும். உழைப்பின் காரணமாகவே மதிப்பும், அதன் விலை அல்லது கூலி இரண்டும் நிர்ணயமாகின்றன. இந்தக் காலத்தையே பார்க்கலாம்: எத்தனையோ பொருள் களுக்குத் தட்டுப்பாடு. சந்தையிலே கிடைக்காத பொரு ளுக்கு கிராக்கி அதிகரிக்கிறது; விலை அதிகரிக்கிறது. காரணம் தேவைப்பட்ட பொருள் கிடைக்காததனால். விலை எவ்வளவு அதிகரித்தாலும், ஜனங்கள் தேவையை ஒதுக்கி விட முடியாது. அதனால் எவ்வளவு பணம் கொடுத்தாகி லும், மக்கள் அந்தப் பொருளை அடைய விரும்புகிறார்கள். அதற்காகக் கள்ளச் சந்தையிலும் விலை கொடுக்கிறீர்கள். இதிலிருந்து ஒரு உண்மை புலனாகிறது. ஒரு பொருளின் தேவைதான் விலையின் அளவுகோல் ஆகிறது. இலக்கிய விமர்சனத்திலும் இப்படித்தான். ஒரு நூலின் தேவை - அதிலுள்ள கருத்துக்கள் சமுதாயத் துக்கு எந்த அளவுக்குப பயனுள்ளது என்பதைப் பொறுத்ததுதான், அதன் மதிப்பும். இலக்கிய விமர்சகன் அந்த மதிப்பைத்தான் எடைபோட வேண்டும்; உரை செய்யவேண்டும். விமர்சனம் ஒரு நூலின் மதிப்பிலும், அதிலுள்ள கருத்துக்களை, ஆசிரியன் எப்படி மக்களுக்கு எடுத்துச் சொல்லுகிறான் என்பதையே பொறுத்திருக்க வேண்டும். 13