பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கிய விமர் ஆனால், இந்த மதிப்பை எடை போடுவதில்தான் சங் கடங்கள் ஏற்படுகின்றன. ஏனெனில், இலக்கியத்தில் மனிதத் தேவை இருப்பது உண்மையே யானாலும், அந்தத் தேவைலில் ஏற்பட்ட விருப்பு வெறுப்புகள் குறுக்கிடு கின்றன. உடல் வளர்ச்சிக்கு எப்படி உணவு தேவையோ, அதுபோல் உள்ளத்தின் வளர்ச்சிக்கு இலக்கியம் என்ற 2.Q தேவை. உணவு என்பது ஒரு பொதுவான தேகையெயானாலும், அதில் ஒவ்வொரு நபருக்கும் ருசி பேசுதம் உண்டு. சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் பிரியமாகச் சாம்பிடுபவகும் பாகற்காயைப் பிரியமாய்ச் சாப்பிடு பவரும் சமூகத்திலே இருக்கிறார்கள். அதுபோலவே இலக்கியத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றிலே சீதி; அதனால் பல்வேறு ரஸபேதங்களும் உண்டாகின்றன. இலக்கிய விருச்சுன் இந்த ரஸபேதத்துக்குத் தன்னைப் பாத்தவரை அடிமையாயிருந்தாலும், நூலை மதிப்பிடும் போது தன்னுடைய ரஸபேதத்தை, விருப்ப வெறுப்பக்களை ஒதுக்கி வைத்துவிட்டே எடை போடவேண்டும்.

ஆனால், விமர்சகரிகள் இந்த விஷயத்தில்தான் பெரும் பாதும் தவறிவிடுகிறார்கள். நூலை எடை போடும்போது தமது படிக்கல்லோடு சொந்த விருப்பு வெறுப்புக்களையும் ஏற்றி விடுகிருர்கள்.

இந்த விருப்பு வெறுப்புக்கள் சம யங்களில், நபர் மதிப்பை உத்தேசித்து அமைந்துவிட் டால், விபரீத பலன்கள் ஏற்பட்டுவிடுகின்றன."நல்ல நூல் என்று அவர்கன் வாயாரப் புகழ்ந்தார்களானால், அந்நூலை அவர்கள் விரும்புவதோடு, ஒப்புக்கொள்ளவும் செய்கிருர்கள் என்றே அர்த்தம். இந்த நிறுவையில் விமர்ச் கனின் விருப்பு வெறுப்பு கலவாதவரை நல்லது. அப்படிக் கலந்திருந்தால், பின்வரும் கேள்வியையே எழுப்பலாம். 14