பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கிய விமர்சனம் குணாதிசயங்கள் - உண்மையில் - என்ன? தனக்குத் தானே முடிவு கட்டிய கொள்கைகள், குறிப்பிட்ட கலைக் குழாத்தின் அபிப்பிராய பேதங்கள், இலக்கிய வர்க்க உணர்ச்சியால் ஏற்படும் விருப்பு வெறுப்புக்கள் - இத்தனை யையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அந்த நூலிலுள்ள எதிர் மனோபாவம், ஒத்துவராத மனப்பாங்கு முதலிய வைகளைச் சரிவர உணர்ந்து, அவைகளைப் பாராட்டியும் தீர்க்கமாய்த் தெரிவித்தும், விளக்கியும் எழுதுவதோடு, பல்வேறு கலைகளின் பல்வேறு முயற்சிகளை ஒப்புக் கொள் லதும் முக்கியம். மேற்சொன்ன லக்ஷணங்களை வைத்துக்கொண்டு தமிழுக்கு வருவோம். தமிழில், இப்படிப்பட்ட விமர்ச கர்கள் இருந்திருக்கிறார்களா என்றால், நாம் யோசிக்க வேலடியிருக்கிறது. தமிழில் இலக்கணத்தைப் பற்றித் தான் பல்வேறு நூல்கள் இருக்கின்றனவே அன்றி, இலக் கியம், அதன் தத்துவங்கள், பாதைகள் முதலியனவற்றை விளக்கும் நூல்களே இல்லை. அதனால், இலக்கிய விமர் சர்களுக்கும் பஞ்சமாய்ப் போய்விட்டது. ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரைப் பற்றி அரிய ஆராய்ச்சி நூல்கள் வெளி வந்திருப்பதுபோல, தமிழில் கம்பனை முழுதும் அறிந்து கொள்வதற்குப் பெரும் நூல் ஒன்றும் வெளிவரவில்லை. காலஞ்சென்ற வ.வெ.சு.அய்யர் எழுதிய கம்பராமாயண ரசனைச்சுவைப் பகுதியைத்தான் நாம் இன்றைய இலக்கிய விமர்சனத்துக்கு வழிகாட்டியாகக் கொள்ளமுடியும். அவ கும் ஓரளவுதான் சாதித்திருக்கிறார். அதற்குமேல் அவர் செல்லாமற் போனது, நம்முடைய துரதிருஷ்டந்தான். வ. வெ. க. அய்யருக்குப்பின் தமிழில் தோன்றிய இருபதாம் நூற்றாண்டு மறுமலர்ச்சி இயக்கம் விமர்சனத் 18