பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கிய விமர்சனம். துறையில் புகுந்தது. ஆங்கில நூல்ப் புலமையோடு தமி ழில் இறங்கிய இந்தக் கோஷ்டி, புதுப்புது வழி களில் தமிழை வளர்த்தது. மேல்நாட்டுப் பாணிகளையும் கையாண்டது. தமிழ் நூல்களை விமர்சனம் செய்யும் வழக்கத்தையும் இந்த நூற்றாண்டிலேதான் எழுத்தாள் கள் பிரதம வேலையாகவும் கொண்டார்கள். என்னும் பிரமாதமான வெற்றி காணவில்லை. காரணம் ன்றைய விமர்சகர்கள் பலர் விமர்சகனின் வர்கள். இன்று தமிழில் வெளிவரும் பாரபட்சமானவை. இல்லாத குணங்களே புத்தக விமர்சனங்கள் காரணம், அநேக விமர்சகர்கள் சில் ஒரு செத்த வெறுப்பு விருப்புக்கு அடிமையானவர்கள்.: நூலை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு, நூலாசிரியனைப் பற்றி எழுதுகிறார்கள். பரஸ்பர முகஸ்துதியாக விமர்சனங்கள் வெளி வருகின்றன. அதனால்தான் நூலை வானளாவப் புகழ்வதும் நிர்ணயமற்றுத் தாக்குவது மான விமர்சனங்களும், பட்டும் படாமலும் *'கவர்ச்சிகர மான மேலட்டைக்கு புஷ்பாஞ்சலி செய்யும் மதிப்புரை களும் வெளி வருகின்றன. சிலர் இலக்கிய விமர்சனம் என்ற சாக்கில், ஒன்றுமற்ற விஷயத்தை ஆஹா ஓஹோ' என்று புகழ்கிறார்கள். சிலர் தமது மேதையை வெளியிடு வதாக எண்ணி நம் நாட்டு ஆசிரியர்களை ஹார்டிக்கும். மாப்பசானுக்கும் ஒப்பிடுகிறார்கள். இதனால் வெளிநாட்டு. ஆசிரியர்களோடு. நமது நூலாசிரியர்களை ஒத்து தோக்கக் கூடாது என்று சொலலவில்லை. ஆனால், ஒப்புநோக்கு என்ற சாக்கில் 'அவரும் இவரும்' என்று அமாவாசையை யும் அப்துல்காதரையும் முடிபோடவேண்டாம் என்றுதான் சொல்கிறேன். 19