பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

அமைப்புக்கு எந்தவித இலக்கணத்துக்கேனும் உட்பட்டுத் தான் ஆகவேண்டும், கலையின் ஜீவனைப் பொறுத்தவரை எல்) அவன் தனது கலாசாரம், நாகரிகத்திற்குத் தக்கவாறு கலையைப் படைக்கிறான், இப்படிப் படைப்பதால், ஒவ்வொத நாட்டுக் கலைஞர்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபாட்டுக்குக் காரணம், அந்தந்த நாட்டு கலைமரபுதான்,

கலை, மரபு என்பது என்ன என்ற கேள்வியை எழுப்ப லாம். ஆனால், அது கலையைப் போலவே சுற்றிச் சுற்றிச் செல்லும். எனினும் கலை மரபைத் தெரியாமல் பின்னால் வரும் விஷயங்களை அறிய முடி யாது.

கலை மரபை அறிவதற்கு நாம் ஓரளவு 11:னித, 'சரித் திரம் தெரிந்து கொள்ளவேண்டும், டார்வினின் பரிணாம எரிதியை ஒப்புக்கொண்டோமானால், முதன்முதல் மூளை இல் 'எதோ சதனம் ஏற்பட்டு, தலையைச் சொறிந்து கொ எண்டு, கூனை நிமிர்த்தி நடந்த முதல் குரங்குதான் மனிதன். ஆதி மனுஷனுடைய வாழ்வெல்லாம் வெறும் உயிர் வாழும் போராட்டத்தான். பிறகுதான் அவன் மிருகங்களை வசக்கி ஆண்டதும், விவசாயத்தில் இறங்கிய தும். மனிதனும் ஒரு மிருகம் தான். இந்த மிருகத்துக்குச் சிந்திக்கத் தெரியும்; சிரிக்கத் தெரியும், மிருகங்களைப் போலவே மனிதவர்க்கமும் மந்தை மந்தையாக வாழ்ந்து வரும் பிராணிதான் . அதாவது, மனிதர்கள் கூட்டு வாழ்க்கை நடத்தினார்கள், உலகத்து மனிதவர்க்கத்தின் பிள்ளைத் தொட்டிலான மத்திய ஆசியாவிலிருந்து மனித வர்க்கம் பல்வேறு கிளைகளாகப் பிரிந்தும் கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் சென்றது. சென்ற இடங்களில் அ வர்கள் மந்தை மந்தையாக-சமூகமாக வாழ்ந்