பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கியம் பிறந்த கதை

ஆனால் இலக்கியம் அப்படியல்ல. இறுதி கண்ட முடிவுதான் அதற்கு அஸ்திவாரமாயிருக்க வேண்டியதில்லை. கனவு நிலையே போதும்.

தரையில் நடந்த மனிதன் பறக்கும் பறவையைப் பார்த்தான்; தானும் பறக்க எண்ணினாள். நீந்தும் மீனைப் பார்த்தான்; தானும் நீந்த எண்ணினான். அடைய முடியாத இந்த ஆசைகள் அவன் மனத்திலே பரம்பரை பரம்பரையாய் எதிரொலித்து வந்திருக்கின்றன. பறக்க முடியாத மனிதன்தான் பறக்கும் மந்திர ஜமுக்காளத்தையும், புஷ்ப விமானத்தையும் கற்பித்திருக்கிறான்; நோய்களைக் குணப் படுத்த முடியாதவனுக்குத்தான் சஞ்சீவி பர்வதத்தைப் பற்றிக் கனவு காண முடியும்; எதிரியை எந்த விதத்தில் கொல்லுவது என்று திகைப்பவனுக்குத்தான் சக்கராவு தத்தைப் பற்றிய நினைவு எழும். வானத்தில் பட்டம் வளைந்து நிமிர்ந்து நீந்தும்போது, பட்டத்தைப் பறக்க விடும் பையனுடைய மனமும் எப்படி பட்டத்தின் அசை வோடு நீந்திக்கொண்டிருக்குமோ, அந்த மாதிரியே இந்த சிருஷ்டிகளும், தன்னுடைய ஆசைகளை மனிதன் இப்படிப் பட்ட கனவு கோட்டைகளின்மேல் நிறுத்தி வைத்தான்.

அதன் விளைவே பண்டை இலக்கியம்: 'மித்தாலஜி என்று கூறப்படும் இதிகாசக் கதைகள். இவைகள் கனவுகள்தான்; எனினும் இவற்றால் பயனில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. பண்டை மனிதனின் அபிலாஷை களும் ஆசாபாசங்களும் எந்த நிலையில் இருந்தன என்பதை இக்கதைகள் காட்டும். வாழையடி வாழையாக வரும் தன் வம்சத்தில் யாரேனும் தன் ஆசையை, பிரத்தி யட்சப் பிரமாணமாக்கி விடுவான் என்ற ஆர்வமும் நம்பிக்கையும் அவனுக்கிருந்திருக்கவேண்டும். இலக்கிய 59