பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலி எதை

வசன கவிதை என்பது ஆங்கில நாட்டிற்கே புதிய சரக்கு; வெற்றி கண்ட சரக்கும் அல்ல. மனசில் படு வதை அப்படி அப்படியே வார்த்தைகளில் தேக்கி விடுவது அந்தமுறை. இதை ஆங்கிலேயர்கள் imaginative School of Poetry என்கிறார்கள். அதாவது கவிஞன் மனசில் படு வதை உருட்டித் திரட்டி உருவம் ஆக்காமல், பூமியிலிருந்து வெட்டி எடுத்த கனிப்பொருள் போல, படைத்து விடு வான். வாசகர்கள் கவிஞன் கொடுத்துள்ள வ ரி க ள வைத்துக்கொண்டு, அவனுடைய நினைவுச் சரட்டைப் பற் நிப் பிடித்து, அதைத் தொடர்ந்து கவிஞனுடைய உள்ள உணர்ச்சிகளைத் தாமாக உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதே அதன் கருத்து.

மனசில் படுவதை அப்படியே கூறுவதுதானே கலை என்று கேட்கலாம். ஆனால், எந்தக் கலைக்கும் ரூபம், உரு வம் வேண்டும். ரூபமற்று, ஆதிய நாதியாய் அங்கிங் கெனாதபடி இருப்பது கடவுளுக்குப் பொருந்தலாம்; கலைக் குப் பொருந்தாது. சோகத்தை மாரடித்து வெளியிடுவது கலையல்ல. 'சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டூடே நில்லென்று சொல்லி நெடுந்தூரம் போனீரே' என்று சோகத்தை உருவாக்குவதுதான் கலை என்கிறார்கள்.

இன்று வசன கவிதை என்று எழுதி வருபவர்களின் முயற்சிகளைப் பார்க்கலாம், தமிழிலே இந்த முயற்சியில் மறுமலர்ச்சியாளர்கள் இறங்கியதற்கு, பாரதி நூல்களின் பைண்டு வால்யூமில், காவியப் பகுதியில், சில வசனங் களும் சேர்ந்து விட்டதுதான் காரணம் என்று சொல்ல லாம், காற்றைப்பற்றியும், மழையைப்பற்றியும். வான், கடல், தாரகைகள், சக்தி முதலியவற்றைப் பற்றியும் பாரதி எழுதியுள்ள அழகான வசனத்தைத்தான் குறிப்

79