பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க வி ைத வசனத்திலேயும் கவி எழுத முடியும் என்று சொல்ப கவர்கள், அவர்கள் சுட்டிக் காட்டும் 'வசன கவிதை' யில், ஒரு ரிதும் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். * சிதும் ' என்று தற்போது அடிபடும் இந்த வார்த்தைக்கு அர்த்த மென்ன? சொல்ல வந்த கருத்தின் பாவம் ஒரு லயத்திலே முறிவின்றி, ரசபேதம், அபசுரம் இல்லாமல் சொல்லுவது தான் என்று கொள்ளலாம். இந்த 'ரிதும்' கவிதையில் மட்டுந்தானா இருக்கிறது? இல்லை. சிற்பத் திறனின் தெளிவு சுழிவுகளில், தங்கு தடையின்றி தெரிந்த நீரோட்டம்போல் செல்லும் ஆற்றெழுக்கு வசனத்தில், ஜதியும் அலாரிப்பும் காட்டுகின்ற நடனக்காரியின் அங்க அசைவுகளில்

- இவைகளிலும் இருக்கத்தான் செய்கிறது. ஆகவே, அருமையான வசனம் இனிமையாக இருந்துவிட் டால் மட்டும் கவிதையாகிவிட முடியாது; அது போலவே கவியருவில் அமைக்கக்கூடிய கருத்துக்களை M.ம் கவிதை என்று சொல்ல முடியாது. கம்பராமாயண வசனத்தை யும், கொண்டு கூட்டு முறைகளை யும் எப்படிக் கவிதை என்று ஒப்புக்கொள்ள முடியாதோ, அப்படியே இந்த வசன கவிதை முயற்சிகளையும் நாம் கவிதை என ஒப்புக் கொள்ள முடியாது.

இன்று வசன கவிதை என்று எழுதியிருப்பவர்களின் முயற்சிகளைப் பார்த்தால், எனக்கு இரண்டு உண்மைகள் புலனாகின்றன. யாப்பிலக்கணம் அவர்கள் கைக்குள் சிக்க வில்லை. இருப்பினும், கு. ப. ரா, பிச்சமூர்த்தி முதலியவர் கள் , யாப்பமைதிக்குள் மடக்கிக் கொண்டுவர விரும்பிய பாடல்களைப் பார்த்தால், எதுகை மோனைகள் ஒழுங்காக இருக்கின்றனவே தவிர, சீர், மாத்திரைகளில் தடுமாற்றம் இருக்கின்றன. இதனால் பாடலில் உருவாகி வரும் * ரிதும்'

83