பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கிய விமர்சனம் சமூ நல்லது. அப்போதுதான் உண்மையான பாத்திர சிருஷ்டி களை உண்டாக்க முடியும். ஒரு ஆசிரியனின் கதை கத்தின் தேவையை, சமூகத்தைத் திருப்திப் படுத்துவதாக அமையவேண்டும். நாளெல்லாம் நமது வாழ்வில். நாறும் பூநாத பிள்ளையையும், பதிமூன்று ரூபாய் சம்பளத்தில் பங்கி அடிக்கும் டானாக்களையும், மாடத் தெருச் சரக்கு கனையும் கண்டுவிட்டு, இல்லாததொன்றைக் கற்பித்து காதல்' 'தெய்வீகம்' என்றெல்லாம் கதைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. மக்கள் சமுதாயத்தை மறந்து எழுதுகிறவனை, மக்களும் மறந்து விடுவார்கள். மக்க ஊக்காக எழுதுவது என்பது யதார்த்த நிலைக்கு உட்பட்ட தாக, உள்ளதை உள்ளபடி சொல்லும் கதையாக இருக்கும். தார்த்தம் என்று சொல்லுவதை, பார்க்காவது கமுகம் பழம் பருப்பாவது துவரை' என்று சொல்லுவது போல் கணித்துவிட முடியாது. வாழ்க்கையை விட்டு, எந்தக் கதையும் தப்பித்துச் செல்ல முடியாது. வாழ்க்கை யிலிருந்துதான் கதாசிரியனுக்குச் சம்பவங்கள் கிடைக்க முடியும்.எந்த விதமான கற்பனை லோகத்திலே சுற்றித் திரிந் தாலும், நாகரத்தினத்தை மறக்காத பாம்மைப்போல், கதாசிரியன் வாழ்க்கையை மறக்கவோ, அதை விட்டு விலகிச் செல்லவோ கூடாது. அப்போதுதான் அவன் சமுதாயத்திடையே கதாசிரியன் என்ற கெளரவத்தோடு வாழமுடியும்.

நான்காவது- கதைக்குத்தேவையானது உருவம். உருவ அமைப்பு சிறு கதைக்கு மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன். பிரபல ஆசிரியர்கள் கூட கதைக்கு உருவ அமைப்பு பிரதானமில்லை. மனோ தர்மம் தான் முக்கியமானது' எனக் கருதுகிறார்கள். இருந் 94