பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

சிறு கதை என்றால் என்ன? இத்தனையையும் (எழுதி விட்டு, இந்தக் கேள்வியை எழுப்புவது • சீதைக்கு அக முடையான் யார்?' என்று கேட்கும் விஷயந்தான். எனினும் **த &ார்த்தைகள் சொல்லலாம்.

கதாசிரியர்களும் விமர்சர்களும் இந்தக் கேள்விக்கு விடை அளிக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், ஒருவ ராவது திருப்திகரமான விடை அளிக்கவில்லை; அளிக்க முடி A!ாது. ஒரு ஆசிரியர் * சிறு கதை என்பது அநுபவத்தின் மேல் ஒட்டுவேலை செய்வது ' என்றார். இன்னொருவர் * 6வாழ்க்கையை ஒட்டிப் புளுகுவதுதான் சிறு கதை என் கிறார். இருவர் கூற்றிலும் உண்மை இருக்கிறது. பொய் சொல்லி நம்பவைப்பது; அதாவது நிஜப் பொய் சொல்லு வதுதான் கதை என்று கருதுகிறார். கதை எழுதும் ஆசிரீயான் உண்மைச் சம்பவத்தைத்தான் உருவாக்க வேண்டுமென்பதில்லை. ஷேக்ஸ்பியர் யுத்தத்தைக் கற்பிதம் பண்ணித்தான் பார்த்தான். ராபின்ஸன் க்ருஸோவை எழுதிய டிபோ கப்பல் உடைந்ததைக் கற்பனையில் தான் கற்பித்தான். எனினும் நாம் நம்பக்கூடிய கற்பனையை, பொய்யை, கதாசிரியன் திறம்படச் சொல்லிவிட்டால், அந்தப் பொய்யை நிஜமென்ற மனமயக்கத்தோடு நாம் படிக்கும்படி, அBxன் செய்துவிட்டால், அதுதான் ஆசிரியனுக்கு வெற்றி, அப்படிப்பட்ட நிலையில், கதாபாத்திரங்களின் மன உணர்ச்சிகளை நாமும் உணர்கிறோம்; அழுகிறோம்; சிரிக்கிறோம். சமயங்களில் ஆசிரியனுக்கே அந்த விதமான உar நெகிழ்ச்சிகள் உண்டாகி விடுகின்றன, கரரணம், அவன் திறம்பட அதை எழுதி முடிக்க வேண்டின், எத்தனையோ கூடுவிட்டுக் கூடுபாய. வேண்டியிருக்கிறது, இருந்தாலும், அது கதை : அதாவது ஜோடித்த பொய்! .

38