பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிகிரிக் குன்றம்

99

வண்டுகளின் கோபத்துக்கு ஆளானால் அவை கொட்டி விஷத்தை உடம்பிலே பாய்ச்சிவிடும்!

இந்த முன் வாசலிலிருந்து செல்லும் படிகள் சில இருக்கின்றன. இந்தப் படிக்கட்டின் இருபுறமும் சிங்கத்தின் பாதத்தைப் போலச் சுண்ணத்தாலே அமைத்திருக்கிறார்கள். நன்றாகக் கால் நகங்கள் தெரிகின்றன. நாலு அடி உயரமுள்ள நகங்கள். அந்த மலையே சிங்கமாக இருந்தால் அதற்கு நகம் நாலு அடி இருப்பது ஆச்சரியம் அல்லவே!

படிக்கட்டில் ஏறினால் இரும்புப் படிக்கட்டுகள் இருக்கின்றன. அவற்றில் ஏறினல் சாய்வான மேற் பகுதிக்கு வரலாம். அங்கே சிறிய சிறிய படிகளை வெட்டியிருக்கிறார்கள். ஓரத்தில் இரும்புக் கிராதிகள் உள்ளன. அவற்றைப் பிடித்துக்கொண்டே வெட்டிய படிகளில் மிகவும் நிதானமாக ஏறினோம். எப்படியோ மலையின் மேற்பரப்புக்குப் போய்ச் சேர்ந்தோம். இரும்புக் கிராதிகளைப் பற்றிக்கொண்டு ஏறுவதற்குக் கொஞ்சம் தைரியம் வேண்டும்.

மேலே கஸ்ஸபனது அரண்மனையின் சிதிலங்களைக் கண்டேன். முன்பு அங்கே எத்தனையோ மண்டபங்கள் இருந்திருக்கவேண்டும். நடுவிலே ஒரு வாவி உண்டு. அதில் இப்போதும் நீர் இருக்கிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேலே நீர் வந்தால் தானே வடிந்து விடும்படி மதகு அமைத்திருக்கிருர்கள். பழைய காலத்துக் கட்டிடம் எவ்வளவு உறுதியாக இருக்கிறதென்பதை அங்கே கண்டேன். ஒவ்வொரு செங்கலும் ஓரடி நீளம், அரையடி அகலம்.

கஸ்ஸபன் தன்னைக் குபேரனாக எண்ணிக் கொண்டு அந்த இடத்தை அளகாபுரியைப் போல