பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

இலங்கைக் காட்சிகள்

நிலைகள் இருந்தன என்று சொல்வதுண்டு. இப்போதுள்ள சிதிலங்களிலிருந்து இது மிகவும் பெரியதாகவே இருந்திருக்க வேண்டும் ஏன்று தோன்றுகிறது.

பராக்கிரமபாகுவின் அரசிருக்கை மண்டபம் மேற்கூரையின்றிச் சில கல் தூண்களோடு இடிந்து கிடக்கிறது. நடுவிலே மன்னன் அமரும் இடம் உயர்ந்து இருக்கிறது. இருபாலும் அமைச்சரும் சேனாதிபதிகளும் அமர்வதற்குரிய ஆசனங்கள் உயரமாக அமைந்திருக்கின்றன. இதற்குள் நுழையும் வாயிலில் உள்ள படிக்கட்டில் அழகான சிற்ப வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். அரண்மனையைச் சார்ந்து நீராட்டு மண்டபமும் அதற்கருகில் நீராடும் வாவியும் இருக்கின்றன. அவற்றின் அமைப்பே தனிச் சிறப்புடையதாக உள்ளது.

மற்றோரிடத்தில் வட்ட டாகெ என்ற புத்தர் திருக்கோயில் இருக்கிறது. இங்கேயும் மேல் விதானம் இல்லை. கோயில் வட்டமாக இருப்பதில்லை வட்ட டாகெ என்று வழங்குகிறார்கள். நான்கு திசைகளிலும் நான்கு வாயில்களும், உள்ளே ஒவ்வொரு வாயிலையும் நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் புத்தர் திருவுருவங்களும் இருக்கின்றன. இதனை அடுத்து வேறு பல மண்டபங்களும் கோயில்களும் காணலாம். ஒரு நீண்ட கல்லில் பெரிய சாஸனம் ஒன்று இருக்கிறது. அதைக் கல்புத்தகம் என்று சொல்கிறார்கள்.

மற்றோரிடத்தில் முழுவதும் கல்லால் அமைந்த சிவாலயம் இருக்கிறது. அந்தக் கோயிலுக்கு வானவன் மாதேவி ஈசுவரம் என்னும் பெயர் வழங்கியது; இது