பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

இலங்கைக் காட்சிகள்

என்ன விசேஷம்?” என்று கேட்கிற பழக்கம் உள்ள நான், இலங்கையில் காரில் பிரயாணம் செய்தபோது அடிக்கடி இத்தகைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். நண்பர் கணேஷ் கூடியவரைக்கும் என் கேள்விகளுக்கு விடை அளித்துக்கொண்டே வந்தார். சில இடங்களில் ஊரில் உள்ள மக்களைக் கேட்டுத் தெரிந்து எனக்குச் சொன்னார். அவருக்குச் சிங்கள மொழியில் நன்றாகப் பேசவும் படிக்கவும் வரும். அதனால் சிங்களவர்களோடு பேசிச் செய்தியை அறிவது அவருக்கு எளிதாக இருந்தது.

கதிர்காமத்துக்குப் போகவேண்டும் என்ற என் ஆவலை நண்பர் தெரிந்துகொண்டிருந்தார். அவர் தாம் தம்மையும் தம் காரையும் சாரதியையும் என் போக்கிலே விட்டுவிட்டாரே! நாளைக்கு வெள்ளிக்கிழமை; கதிர்காம வேலனைத் தரிசித்துக்கொள்ள நல்ல நாள். அதற்கு முன்னே பார்க்கவேண்டிய இடங்கள் சில உண்டு. முக்கியமாக அசோகவனத்தைப் பார்க்கவேண்டாமா?' என்று கேட்டார்.

"அசோகவனமா? நாம் போகிற வழியிலா இருக்கிறது? சீதை சிறையிருந்த அசோக வனத்தையா சொல்கிறீர்கள்?"

"ஆம், சாட்சாத் அதே அசோகவனந்தான்.” "நான் அசோக மரத்தைக்கூடப் பார்த்ததில்லை. தமிழ் நாட்டில் எது எதையோ அசோக மரம் என்று சொல்கிறார்கள். நெளி நெளியாக வளைந்த இலையும் நெட்டையான உருவமும் உடைய நெட்டிலிங்க மரத்தை அசோக மரம் என்கிறார்கள். காவியங்களில், அசோகமரம் நெருப்பைப் போலச் செக்கச் செவே