பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

இலங்கைக் காட்சிகள்

என்று சேக்கிழார் பாடுகிறார். வெள்ளாடையைப் போர்த்துச் சென்றார் என்பதை, "வெண் புடைவை மெய்சூழ்ந்து" என்று சொல்கிறார். இங்கே புடைவை என்றது பெண்கள் உடுக்கும் உடையாகுமா? பொதுவாக, ஆடை என்றே கொள்ள வேண்டும்.

புடைவைக் கடையைப் பார்த்துவிட்டு நண்பர் வீட்டுக்குச் சென்று விருந்துணவு அருந்திச் சற்று இளைப்பாறினோம்.

"அசோகவனத்துக்குப் போக வேண்டாமா ?" என்று ஆவலுடன் கேட்டேன்.

"நாம் அசோக வனப் பகுதியிலேதான் இருக்கிறோம்" என்று நண்பர் சொன்னர்.

"அசோக மரம்?"

"பார்க்கலாம்."

சிறிது நேரம் கழித்துப் புறப்பட்டோம். வழியில் பல இடங்களில் அசோக மரங்களைப் பார்த்தேன். கவிகள் சொன்ன வருணனை அப்போதுதான் எனக்கு விளங்கியது. அதன் செம்மலர்களைக் கண்டேன்.

போகும் வழியில் ஹக்கலாப் பூந்தோட்டத்தை அடைந்தேன். கடல் மட்டத்திற்கு 5000 அடி உயரத்துக்குமேல் அமைந்திருக்கிறது அது. மலைப் பகுதிகளில் வளரும் மரம் செடி கொடி வகைகளை அங்கே வளர்த்துப் பாதுகாக்கிறார்கள். இமய மலைப் பகுதிகளில் வளரும் பலவகை மரங்களை அங்கே கண்டேன். அங்குள்ள குளத்தில் எத்தனை வித மலர்கள்! நான் அதுகாறும் காணாத மலர் ஒன்றைக் கண்டேன்; வியந்-