பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதிர்காமம்

137

இடங்களில் மூன்று பொற்கலசங்கள் இருக்கின்றன. அவற்றைக் காணும்போதுதான் கோயில் என்ற நினைவு வருகிறது.

உருவமில்லாத சிவலிங்கத்தை இறைவனாக எண்ணித் தரிசித்துப் பக்தி பண்ண வழி இருக்கும்போது கோபுரமும் மண்டபமும் இல்லாத இந்தச் சாவடியைக் கோயிலாகக் காண வழி இல்லையா ? புராணமும் துதிகளும் நம்பிக்கையும் இந்தச் சாவடியையே கந்தலோகத்துக்குச் சமானமாக்கியிருக்கின்றன. கதிரேசன், கதிரை வேலன் என்று இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் வழங்கும் பெயர்களுக்கு மூலம் அந்தச் சிறிய ஓட்டு வில்லைக் கூரை வேய்ந்த சாவடி[1] என்பதை நினைத்துப் பார்த்தால்தான் அதன் மகிமை புலனாகும். அதற்குக் காரணம் என்ன ? மனிதனுடைய உணர்ச்சி தான். அன்பர்களின் உணர்ச்சிக் குவியலுக்கு அடையாளமாக, கடவுளைக் காணவேண்டும் என்று ஏங்கிய தாபத்தைத் தணிக்கும் அருவியாக, எத்தனை இடையூறுகள் வந்தாலும் பொருட்படுத்தாமல் தீவிர வைராக்கியத்தோடு நாடு கடந்து கடல் கடந்து காடு கடந்து வரும் பக்தி வேகத்துக்கு இலக்காக அந்தச் சிறு கட்டடம் நிலவுகிறது. அப்படி எல்லோருடைய மனத்தையும் இழுக்க அதில் என்ன இருக்கிறது ? அதுதான் தெளிவாக யாருக்கும் புரியவில்லை !

திருக்கோயிலின் முன் நின்றேன். கோயில் வாசலில் ஒரு பெரிய பழைய மரக்கதவு இருக்கிறது. நாங்கள் சென்றபோது கோயிலில் பூசை முடிந்து


  1. இப்போது இந்தக் கூரையின்மேல் தகடுகளே அடித்திருக்கிறார்கள்.