பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதிர்காமம்

143

எல்லாவற்றையும் தரிசித்துக்கொண்டு வள்ளியம்மை கோயிலுக்கு வந்தோம். அதன் அருகில் ஒரு முஸ்லிம் பக்தருடைய சமாதி இருக்கிறது. முத்துலிங்க சுவாமியின் தொண்டர் அவர் என்று சொல்கிறார்கள். சில மடங்களுக்குள்ளே போய்ப் பார்த்தோம். தமிழ் நாட்டிலிருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஏற்றபடி அவை அமைந்திருக்கின்றன. அவற்றில் உள்ளவர்கள் பக்தர்களிடமிருந்து வாடகை பெற்று ஜீவனம் செய்கிறவர்கள்.

ஒருவாறு கதிர்காமத் தலத்தைத் தரிசித்தேன்; அமைதியாகத் தரிசித்தேன் ; கண்ணாலே கண்ட காட்சிகள் அதிகம் இல்லை; ஆனால் கருத்தால் உணர்ந்த காட்சிகள் பல ; உடம்பு புளகிப்ப நின்றதும் உண்டு.

எங்கோ காட்டுக்கு நடுவில் வேடர்கள் வாழும் இடத்தில் அவர்கள் செய்யும் பூசையை ஏற்றுக் கொண்டு முருகன் அருட்பெருங் கடலாக எழுந்தருளியிருக்கிறான்.


"வனமுறை வேட்ன் அருளிய பூசை
மகிழ்கதிர் காமம் உடையோனே"

என்று அருணகிரி நாதர் பாடுகிறார். கண்காணா மூலையிலே கதிர்காமம் இருக்கிறது. கருத்தும் காணா வகையிலே பரம ரகசியமர்கக் கதிர் காமப் பொருள் மறைந்திருக்கிறது. ஆனாலும் அந்தத் தலத்தின் பெருமை எவ்வளவு காலமாக, எவ்வளவு விரிவாகப் பரவியிருக்கிறது! எத்தனை உள்ளங்கள் அதனைக் காண வேண்டுமென்று துடிக்கின்றன! ஒரு முறை கண்ட