பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

இலங்கைக் காட்சிகள்

ஆகிய பல தோட்டங்கள் அங்கே இருக்கின்றன என்றார்கள்.

காரில் போகும்போது அவற்றையெல்லாம் பார்க்கலாம் என்று எண்ணினேன். இயற்கை வளம் சூழ்ந்த குறிஞ்சி நிலத்தினூடே கார் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. கார் போன வேகத்தினால் சாலைகளின் சிறப்பு எனக்கு நன்றாக விளங்கியது. வர வரக் குளிர்ச்சி மிகுதியாகத் தெரிந்தது. ஆனால் இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்க முடியவில்லை. அப்போது இருட்டிவிட்டது.

"அதோ ஒரு ரப்பர்த் தோட்டம்" என்று நண்பர் கணேஷ் காட்டினார்.

அந்த இருட்டில் ரப்பர்த் தோட்டம் எனக்கு எங்கே தெரியப்போகிறது? நெட்டை நெட்டையாக மரங்கள் நின்றது மாத்திரம் தெரிந்தது. அடர்த்தியான காடுகள். அவற்றின் அழகைக் காணக் கதிரவனுடைய கருணை இல்லாமல் முடியுமா? வண்டி பல காடுகளையும் தோட்டங்களையும் மலைப்பகுதிகளையும் ஆற்றையும் கடந்து சென்றது. நான் ரப்பர் மரத்தையும் காண முடியவில்லை; கோகோ மரத்தையும் காணவில்லை. ஆனாலும் அவற்றைத் தாண்டிச் சென்று கொண்டே யிருந்தேன். 'விடிந்தால் எல்லாம் வெட்ட வெளிச்சமாகி விடுகிறது' என்ற நம்பிக்கை இருந்ததனால், அந்த இருட்டில் அவற்றைப் பார்க்கக் கூடவில்லையே என்ற வருத்தம் உண்டாகவில்லை.

கண்டிக்கு வந்து சேரும்போது இரவு 11-30 மணி. அன்று இரவு கிரிமெட்டியா என்ற இடத்தில் தங்குவ