பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சி வளம்

53

மான மாவிலைபோல இருக்கின்றன. அடர்ந்து செறிந்த தழையுடையவை, காய்கள் பல நிறங்களையுடையனவாய்த் தொங்குகின்றன. அவை பார்வைக்குப் பங்களூர்க் கத்தரிக்காய் போலத் தோன்றுகின்றன. காய்கள் பல நிறமாக இருந்தாலும் பழுத்தால் எல்லாம் மஞ்சள் நிறம் ஆகிவிடும். கோக்கோக் காய்க்குள் வாதாங்கொட்டை மாதிரி கோக்கோப் பருப்புகள் இருக்கின்றன. அவற்றைப் பக்குவமாகப் பொடி செய்து கோக்கோ தயாரிக்கிறார்கள். இலங்கையில் சாகொலேட் - தான் செய்கிறார்களாம். ஸ்விட்ஜர்லாந்தில்தான் கோக்கோ செய்கிறார்களாம். அங்கேதான் அதற்கு வேண்டிய சீதோஷ்ண நிலை இருக்கிறதாம். கோக்கோ செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் ஒரு தரமும் கோடைக்காலத்தில் ஒரு தரமும் காய்க்கும். செப்டம்பர் மாதத்தைக் காலம் என்று சொல்கிறார்கள். அப்போது மிகுதியாகக் காய்க்கும்.

கோக்கோத் தோட்டங்களிலே அங்கங்கே மிளகுக்கொடி ஓடிக் கடந்தது. தென்னை, பலா, கமுகு மரங்கள் எங்கே பார்த்தாலும் இருந்தன. மலையின் மேல் அடர்த்தியாகத் தென்ன மரங்களைப் பார்த்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். எல்லா மரங்களும் மிகமிக உயரமாக வளர்ந்திருந்தன. அந்தத் தென்ன மரங்களையும் கமுக மரங்களையும் பலா மரங்களையும் கண்ட போது சீவகசிந்தாமணிப் பாட்டு ஒன்று என் நினைவுக்கு வந்தது.

ஏமாங்கதம் என்ற நாட்டைத் திருத்தக்கதேவர் வருணிக்கிறார். அங்கே இயற்கை வளம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. தென்ன மரத்தோப்புகளும் கமுகந் தோட்டமும் பலாமரச் சோலையும் ஒன்றோடு