பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்டி விழாக்கள்

59

யும் பழக்க மாறுதலும் வந்துவிட்டன. இங்குள்ள தமிழர்களில் பழையவர்களாகிய யாழ்ப்பாணத்தவர்கள் எப்பொழுதுமே சிவபக்தியுடையவர்கள்" என்று அவர் எனக்கு விளக்கினார்.

முதலில் பாரதி விழா ஆரம்பமாயிற்று, கிரிமெட்டியாத் தோட்டத்தின் சொந்தக்காரராகிய திரு வைத்தியலிங்கம் எல்லோரையும் வரவேற்றார். அப்பால் உதவிக் கல்வி மந்திரியாக இருந்த திரு கனகரத்தினம் விழாவைத் தொடங்கி வைத்தார்.

திரு கனகரத்தினம் யாழ்ப்பாணத் தமிழர். தமிழில் அதிக ஊக்கமும் பற்றும் உள்ளவர். யாழ்ப்பாணத்தில் மிகச் சிறப்பாகத் தமிழ் விழா நடந்ததல்லவா? அந்த விழாவை அங்கே நடத்த வேண்டுமென்று முயன்று தமிழ் வளர்ச்சிக் கழகத்தாரை அழைத்தவர் அவரே. "கண்டியைத் தலைநகராகக் கொண்ட மத்திய மாகாணத்தில் ஐந்து லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய சார்பில் இந்த விழா நடைபெறுகிறது. இப்படி அங்கங்கே தமிழுக்குப் புத்துயிர் உண்டாவதைக் காணக் காண எனக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாகிறது” என்று அவர் பேசினார்.

நான் கொழும்பில் இறங்கியவுடன் வீரகேசரி ஆசிரியர் திரு ஹரன் தமிழ்நாட்டின் நிலைமையைக் கேட்டதையும், தமிழ் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதை நான் சொன்னதையும் முன்பே எழுதியிருக்கிறேன்.

வீரகேசரி - ஆசிரியர் தலையங்கம் எழுதுவதோடு 'ஊர்க்குருவி' என்று தலைப்பிட்டுப் பல விஷயங்களை ஒவ்வொரு நாளும் எழுதி வருகிறார். தலையங்கத்தைப்