பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருவி ஓசை

77

பள்ளி, முடியிறக்கு மண்டபம், வாத்திய மண்டபம் எல்லாம் கட்டவேண்டும். ஆண்டவன் அருளால் எல்லாம் நடக்கவேண்டும்” என்று அந்தக் கோயில் தொண்டர் சொன்னார்.

"எல்லாம் நடக்கும்" என்று வீரகேசரி ஆசிரியர் ததாஸ்து சொன்னார்.

நானும் ஆமோதித்தேன். இரண்டு பாட்டுப் பாடினேன். எதிரே ஓடிக்கொண்டிருந்த அருவி எங்களோடு சேர்ந்து தன் இமிழிசையிலே ஆமென்று இசைத்தது இன்னும் என் காதில் அந்த அருவியின் ஒலி அமைதியின் கானமாகவும், அன்பின் இசையாகவும், தனிமையின் பாட்டாகவும், இயற்கையழகின் மழலையாகவும், முருகனுடைய சிலம்பொலியாகவும் கேட்கிறது.