பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 தடுப்பதில் போலீசாரின் கெடுபிடி வரம்பு கடந்து செயல் பட்டது. சுமார் 9 மணிக்கு மேல் யாரையும் நீதி மன்ற வளாகத் தீற்குள் நுழைய விடாதபடி தடுத்து மேற்குப் புறத்தில் ஓட்டல் சந்திப்பிலும் கிழக்குப் புறத்தில் மிக நீண்ட தூரத்திலேயும் போலீசார் நூற்றுக்கணக்கில் குவிந்து நின்று தடுத்து விட்டனர். முன்னதாகவே ஏராளமான எனினும் 9 மணிக்கு தோழர்களும், தாய்மார்களும் நீதி மன்ற வளாகத்திற்குள் குவிந்து விட்டனர். சுமார் 11. 20 மணியளவில் கழகத் தலைவர் கலைஞரை யும் மற்றும் தோழர்களையும் போலீசார் மத்திய சிறையில் இருந்து அழைத்து வந்தனர். அப்போது பொங்கி எழும் பெருங்கடலின் பேரிரைச்சல் போல கழகத் தோழர்கள் “கலைஞர் வாழ்க!” ‘“கழகத் தலைவரை விடுதலை செய்+ “அராஜக ஆட்சி ஒழிக” என்று முழக்கம் எழுப்பினர். அப் போது எங்கும் உணர்ச்சி மயமான நிலை பரவியிருந்தது. ஏராளமான வெடிகள் வெடிக்கப்பட்டு சில பகுதிகளில் சற்று நேரம் புகை மூட்டம் நிலவியது. நீதி மன்ற வளாகத்திற்கு வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தோழர்களையும், தாய்மார்களையும் பொது மக்களையும் கட்டுப்படுத்த போலிசாரின் குதிரைப் படை மிக மோசமாகச் செயல்பட்டது. பொது மக்களையும் தோழர்களையும் நீதிமன் றத்தை அண்டவிடாமல் ஓட ஓட விரட்டினர். எங்கு நோக்கினும் போலீஸ் மயமாகவே தோற்றம் அளித்து பொதுமக்களை பீதியடையச் செய்ய வேண்டும் என்பதில் அரசு மிகுந்த அக்கறை காட்டியிருந்தது. சரியாக 11.24க்கு நீதிபதி ரங்கசாமி தனது இருக்கை யில் வந்து அமர்ந்ததும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் வரிசையாகப் படிக்கப்பட்டது. அப்போது பெரும்பாலானவர்களைபோலீசார்நீதிபதியின் முன்கொண்டு வராதது தெரிந்தது. அதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் சிறிது நேரம் தடைப்பட்டன. அதனால் நீதிபதி போலீசார் மற்றவர்