பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 செய்ததையொட்டி தன்னுடைய வாக்குமூலத்தைப் படித் தார், ஆனால் இன்றைக்கு அரசு வழக்கறிஞர் அறிக்கை- யைப் படிக்க எந்த வகையிலும் நியாயமில்லை என்று தன்னுடைய மறுப்பைத் தெரிவித்தார். அதற்கு அரசாங்க வழக்கறிஞர் இது எதிர் மனு என்று குறிப்பிட்டார். உடனே வழக்கறிஞர் என் வி என் சோமு. எம் எல் ஏ அன்று கழகத்தலைவர் தாக்கல் செய்தது மனு அல்ல; அது ஒரு அறிக்கை; எனவே இதை அரசாங்க வழக் கறிஞர் படிக்கக் கூடாது; இதைப்போல் அரசாங்க வழக்கறி ஞர்கள் நீதிமன்றத்தில் வந்து அறிக்கைகள் படிப்பதற்கு முன்னுதாரணம் கிடையாது எனவே நீதிபதி அவர்கள் அதனை அனுமதிக்கக கூடாது என்று தன்னுடைய கடுமை ஆட்சேபனையைத் தெரிவித்தார். ஏனைய கழக வழக்கறிஞர்களும் அதற்கு ஆட்சேபனைகளைத் தெரிவித் தார்கள். யான பிறகு நீதிபதி ஆட்சேபனைகளை பதிவு செய்து கொண்டு அரசாங்க வழக்கறிஞரை அந்த அறிக்கையைப் அனுமதித்தார். படிக்க. கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் உடனே நீதிபதியை நோக்கி, "நீதிபதி அவர்களே, அவருக்கு அறிக்கையினைப் படிக்க வாய்ப்பளித்தால், அதற்குப் பதில் சொல்கின்ற வாய்ப்பை எனக்கும் உடனே தரவேண்டும்” என்று சொல்லவே, நீதிபதி அதற்கு ஒத்துக்கொண்டார். இந்நிலையில் அரசாங்க வழக்கறிஞர் தான் படிக்கிற அறிக்கையின் நகலை கழக வழக்கறிஞர்களுக்குக் கொடுக் காமல் படிக்கத் தொடங்கியவுடன், கழகத் தலைவர் கலைஞர் அந்த அறிக்கையின் பிரதி ஒன்று தனக்கு வேண்டுமென்று கேட்டார். அதற்கு அரசு வழக்கறிஞர் படித்து முடித்ததும் தருகிறேன் என்றார், (அன்றைய தினம் 29-9-81 அன்று கழகத் தலைவர் கலைஞர் நீதிமன்றத்தில் படித்த அறிக்கை முன்கூட்டியே அரசு வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிக்கும் தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ) கழகத் தலைவர். பின்னர் நீதிபதியைப் பார்த்து, "நீதிபதி அவர்களே, என்னை உடனே பதில் சொல்ல தாங்கள் அனுமதித்திருக்கிறீர்கள். எனவே அந்த நகல் இல்லாமல்