பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீக்குளித்தவர்களைப் 120 பற்றிக் குறிப்பிட்டிருப்பது வேதனையாக இருக்கிறது. “சாராயம் குடிக்க காசு கேட் டான்; கொடுக்க மறுத்து; அதனால் தகராது ஏற்பட்டு தற் கொலை செய்து கொண்டாள்” என்று கூறியிருக்கிறார்கள். தாய்க்குலத்தின் கண்ணீரைத் துடைக்கத்தான் மதுவிலக் கைத் தளர்த்தினேன் என்று சொன்னாரே, இந்த வாதப்படி அது என்ன வாயிற்று? தீக்குளித்தவர்களைப் பற்றி நாடே அறியும். தீக்குளித் தவர்கள் அனைவரும் குடிசையில், ரோடு ஓரத்தில் குடியிருப் பவர்கள் என்று கேலி பேசுகிறார்கள். பணக்காரர்கள், கோபுரத்தில் இருப்பவர்கள். கோபு ரத்தில் இருக்கும் கோமான்சுள, பூமான்கள், சீமான்கள் இந்தக் கருணாநிதிக்காக வர மாட்டார்கள். இந்தக் கருணா நிதியும் கோபுரத்தில் இருப்பவர்களுக்காக வாதாட மாட்டான். தீக்குளிப்பை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். என்று அரசு வழக்கறிஞர் மூலம் குற்றம் சாட்டுகிற முதலமைச்சர் 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் தீக்குளித்து இறந்த சின்னசாமியின் குடும்பத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் அன்றைய தினம் வழங்கினாரே, அது தீக்குளிப்பை ஊக்கப் படுத்தியது ஆகாதா? நாங்களும் தீக்குளிப்பை ஊக்கப் படுத்தவில்லை எங்களுடைய பொதுச் செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர், சிறையில் இருந்தபடி நானும் யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்று மாறிமாறி அறிக்கை விடுத்தோம். ஆனால் வன்முறை கூடாது என்று சொல்கிற அ. து. மு. கழகத்தினர் 1972-ல் தி மு. கழகத்திலிருந்து எம். ஜி. ஆர். விலக்கப்பட்டதும் எத்தனை பஸ்களுக்குத் தீ வைத்தார்கள்? எத்தனை பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன? அமைச்சர் மன்னை நாராயணசாமியின் மண்டை உடைக்கப்பட்டது; அமைச்சர் வேழவேந்தனின் கார் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. சமீபத்தில் ஐ. ஜி. கூட ஒரு அறிக்கை கொடுத்திருந் தார். பஸ்களை சேதப்படுத்துகிறவர்களுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்க சட்டம் கொண்டு வரப்பட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். உடனே அந்தச் சட்டத்தைக் கொண்டு வாருங்கள். முன்தேதியிட்டு அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தால், 1972-ல் நடந்த சம்பவங்