பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்ப்பையும், தங்கள் தலைப்பட்டனர். 123 கண்டனத்தையும் காட்டத் வன்முறையை கழகம் ஏற்காது! ஆனால், கழகம் எந்நாளும் வன்முறையை ஏற்காது அப்படிப்பட்ட வன்முறைகளை கழகத்தலைமை ஆதரிக்கா என்பது கழகத்தின் மரபு என்பதை எண்ணிய செயல்வீரர் கள் "செய் அல்லது செத்துமடி' என்னும் மொழியைச் சிந்திக்க முற்பட்டுவிட்டனர். மக்களிடம் மங்கியுள்ள தமிழ் இன உணர்வு - சுடர்விட்டு ஒளிர வழி என்ன என்று கருதிய அந்த உள்ளங்கள் தங்களையே தியாகத் தீக்கு இரையாக் கினால்தான் - அந்த உண்மை உலகோர் கண்ணுக்குத் தெரி யும் - கருத்துக் குருடருக்கும் புலனாகும் என்று தீர்மானித்து விட்டன. தீக்குளித்த தியாகிகள்! அதன் பயங்கர விளைவுதான், திருக்காட்டுப் பள்ளி யில்- கோயிலடி பிருந்தாவன் என்னும் இளைஞன் தீக்குளித் தான். கலைஞர் விடுதலையாகி விட்டாரா என்று கேட்ட வாறே உயிர் விட்டான். திருச்சியில் மனோகரன் என்னும் இளைஞர் - 'கலைஞரை விடுதலை செய்' என்று முழங்கியவாறே தீக்குளித்தான், திருவாரூர் தோழர் கிட்டு, மனைவி, மக்களைத் துயரக்கடலில் தள்ளிவிட்டுத் தீக்குளித்து மரணம் தழுவி னார். பெருந்துறை முத்துப்பாண்டியன் தீக்குளித்து, எரியும் உடலுடன்' அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க நடந்து வீழ்ந்து மறைந்தான். சென்னை நகர் ஓட்டேரி மேரி அம்மை - தனது கணவனையும் குழந்தைகளையும் தவிக்க விட்டுத் தீக்குளித்து தியாகியானார். பல்லடம் முத்துச்சாமி, தீப்பற்றிய நிலையில் - கைதாகி மருத்துவமனையில் இருக்கிறார். திருப்பூர் திருவேங்கடம் தீப் பற்றி முகம் கருகி, கைதாகி மருத்துவமனையில் உள்ளார். தருமபுரியில் இளைஞர் அணிச்செயலாளர் இராசேந் திரன் தீக்குளித்து வெந்து, உயிருக்குப் போராடிக் கொண் டிருக்கிறார், ஜெயங்கொண்டம் இராமையன், தீப்பற்றிய நிலையில் கைதாகி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். நாமக் கல்லில் கொண்டிச்சட்டி இராமசாமி அவர்கள் மனைவியை