பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 அந்த விளக்குகளையும் இழித்துரைக்கும் விழியற்ற பிறவிகள் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்கின்றன! “ஞாயிற்றின் ஒளியை நாய்க் குடையா மறைக்கும்?' எனப் பேராசிரியர் கேட்டிடும் கேள்வியைத்தான் நாடே கேட் கிறது, அந்த நாத்தழும் பேறிகளைப் பார்த்து! பொச்சரிப்பு பொறாமை பொல்லாங்கு இந்தப் புன்மைகளின் கிடங்காய்த் தோன்றும் புழுத் துப்போன உள்ளங்கொண்டோர்க்கு. இந்தச் செய்திகளைத் தாங்கிக் கொள்ளத்தான் முடியாது! னார். எரிச்சலைக் கொட்டுவர் ஏகடியம் பேசுவர் எடுத்திடுவர் பேனாக்களை எழுதிடுவர் ஏதேதோ! அத்தகையோரைத்தான் அன்றைக்கே அண்ணா சொன் “நரகல் நடையழகர்கள்” "நடுங்கா நாக்கழகர்கள்” என்று! “சந்துமுனைச் சிந்து பாடிகள் என்பதும் அந்த இழிதகையோர்க்கு அண்ணன் சூட்டிய பட்டம்தானே! இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரின் போது தீக்குளித்து மடிந்த சிங்கத்தமிழன் சின்னச்சாமி மீதும் அவன் குடும்பத் தார் மீதும் வாரியிறைத்த அவதூறுகள் காது கொடுத்துக் கேட்கக்கூடியவைகளா? அவனை மட்டுமா? கடன்கரன் திருடன் வயிற்றுவலிக்காரன் பெருநோயாளி இப்படியெல்லாம் தமிழ் காக்கத் தணல் புகுந் த மொழிப்போர் வீரர்கள் மற்ற ஏழு பேர் மீதும் களங்கச் சேறு வீசப்படவில்லையா? அந்த நரிகளின் ஊளைகளுக்கெல்லாம் அலட்சிய மொன் றையே பதிலாகத் தந்து வலிவாக்கப்பட்டது தான் நமது கழகத்தின் பாடிவீடு!