பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 கழகம் தொடர்ந்து பேரணிகள், கண்டனக் கூட்டங்கள் வாயிலாகத் தாயகத் தமிழர்களின் இதயத்துடிப்பினை இந் தியப் பேரரசுக்கு எடுத்துக்காட்டி-இலங்கையில் எழும் சிங்க ளவர் வெறிக்கு அணை கட்டி வந்திருக்கிறது. இரண்டு மூன்று ஆண்டுகட்கு முன்பு இலங்கையில் தமி ழர்கள் மீண்டும் கொலைவெறிக்கு ஆளான போதும் கழகத் தின் பேரணியும், தமிழர்கள் ஒருமித்த குரலில் கொடுத்த எதிர்ப்பு முழக்கமும் இலங்கைத் தமிழர்களை வாழவைக்கப் பெரிதும் உதவின! இப்போது மீண்டும் தொல்லை! இல்லை தமிழர்கள் உரி மையும், உடைமையும், உயிரும் - ஏன் மானமும் கூட கொள்ளையோ கொள்ளை! இதோ அந்த அநியாயத்தைக் கண்டித்துத் தமிழகம் இலிர்த்தெழுந்து நிற்கிறது! இலங்கைத் தமிழர்கள் இப்படி எத்தனை முறைதான் செத்துச் செத்துப் பிழைப்பது. இந்தியப் பாராளுமன்றத்தில் நமது கழக உறுப்பினர் கள் உட்படப் பலரும் கவனர்ப்புத் தீர்மானங்களைக்கொடுத் திருப்பதாகத் தகவல். குலுக்கல் முறைப்படி எந்த கவன ஈர்ப்புத்தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறதோ: இம்மடல் தீட்டும் வரையில் எனக்குத் தெரியாது! இலங் கையில் தமிழர்களுக்குற்ற தீமை களையப்பட, இந்தியப் பேரரசு எடுத்திட வேண்டிய முறையான கடமைகனைக் குறித்து நமது கழகத்தினர் டில்லியில் வலியுதத்துவார்கள்! தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருப்பார்கள்!! கழகத்தின் சார்பில் பிரதமரையும், வெளி விவகார அமைச்சரையும் நேரிலே சந்தித்து இலங்கை நிலவரங்களை ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். அவ்வப்போது அங்கே உருவாகிடும் நிலைமைகள், தலைமைக் கழகத்துக்குத் தரப்பட்டவுடன் அவற்றை உடன. டியாக பிரதமர் அவர்களின் கவனத்திற்கும், வெளிவிவகார அமைச்சர் அவர்களின் கவனத்திற்கும் கழகத்தலைமை, தந்திகளின் மூலம் தெரிவித்துக் கொண்டேயிருக்கிறது! தமிழ்நாட்டு மக்களின் ஆழ்ந்த கவலை இலங்கையைப் பற்றியதாக இருப்பதை உணர்ந்துள்ள நமது மத்திய அரசு