பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுகுறித்து 14 அறிக்கையொன்றினை நாடாளுமன்றத்தில் வைத்திடப்போகிறது என்ற செய்தியும் வந்துள்ளது. வேறொரு நாட்டுப் பிரச்சினையில் எத்துணை எச்சரிக்கை யோடு தலையிடவேண்டும் என்பதை நாம் உணராதவர்கள் அல்ல! தமிழ்க்குலத்தினரைத் தாக்கி யொழிப்பது என்ற பெய ரால் இலங்கையில் மனிதாபிமான உணர்வுக்கே அறைகூவல் விடப்பட்டுள்ளது என்பதை இந்தியப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் எண்ணிப்பார்த்து செயல்படத் தயங்க மாட்டார் என்றே தாய்த்தமிழகத்து மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கொழும்பில் உள்ள இந்திய ஹை கமிஷனர் திரு ஆப்ரகாம் அவர்களிடமிருந்து இந்திய அரசுக்குக் கிடைத் துள்ள தகவலின்படி இலங்கையில் நிலைமை மோசமாக இருக்கிறது-பெரும்பாலும் தமிழர்கள் வன்முறை வெறி யாட்டங்களால் தாக்குண்டு பாதிக்கப்பட்டுள்ளார்கள்- என்ற உண்மைகள் தெளிவாக்கப்பட்டுள்ளன. மானபங்கம்- சித்ரவதை - மரணம் - என்ற வன்முறை நெருப்பு வளையங்களுக்குள் புழுக்களாய்த் துடிக்கும் இலங் கைத் தமிழர்களின் எதிர்காலம் எப்படி நிர்ணயிக்கப்பட இருக்கிறதோ! என்பதை கொந்தளிக்கும் உள்ளத்தோடு- இங்கே உள்ள ஐந்துகோடித் தமிழர்கள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள்! அன்புள்ள, மு. க. (தலைவர் கலைஞர் 20-8-81 அன்று முரசொலியில் எழுதிய கடிதம்)