பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முழுக்க முழுக்க வெளிநாட்டு பிரச்சினை என்று இலங்கை தமிழர் பிரச்சினையை தவிர்த்துவிட முடியாது சென்னை, ஆக. 21 முழுக்க முழுக்க வெளிநாட்டுப் பிரச்சினையென்று கூறி இலங்கைத் தமிழர் பிரச்சினையை தவிர்த்துவிட முடியாது என்று இன்று சட்டப் பேரவையில் இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து அரசின் சார்பில் கொண்டுவரப் பட்ட தீர்மானத்தை வழிமொழிந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார். தலைவர் கலைஞர் அவர்களது உரை வருமாறு:- களது அரசின் சார்பில் அவை முன்னவரால் கொண்டு வரப் பட்ட இந்தத் தீர்மானத்தை வழி மொழிகிற வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். இருபதாண்டு காலமாகவே இலங்கைத் தமிழர் பிரச்சினை பயங்கரமாக எழுவதும், இலங்கையிலே உள்ள தமிழர்கள் இனவெறிக்கும் ஆதிக்க வெறிக்கும் ஆளாவதும் அவர்களுடைய கண்ணீ ரைத் துடைக்கின்ற கரம் தாய்த் தமிழகத்திலிருந்து எழுவதும் வரலாற்று உண்மை நீகழ்ச்சியாக ஆகி விட்டதை நாம் உணர்கிறோம். . பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இருபதாண்டுகளுக்கு முன்பு இலங்கையிலே தமிழர்கள், தமிழ் மங்கையர், தமிழ் மழலையர் இவர்கள் அனைவரும் மரண வேதனைக்கு, மானபங்கத்திற்கு ஆட்படுத்தப்பட்டபோது தமிழ் நாடு கொடுத்த குரலின் காரணமாக அமைதிநில விடவும்‘அதற்குப் பிறகு ஒரு நீண்ட இடைவெளிக் காலம் தமிழர்கள் சற்று நிம்மதியாக வாழ்ந்திடவுமான நிலை இலங் கையில் ஏற்பட்டது. ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை யிலே இருக்கிற சிங்கள மக்களோடு நாங்களும் ஒற்றுமை யாக,அதே நேரத்தில் தமிழர்களுக்கு உரிய கலாச்சார மொழி இனஉரிமைகளை சமமாக பெற்று வாழவேண்டும்